அரசின் காப்பீட்டுத் திட்டங்கள்: மத்திய அரசு, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான ஓய்வூதிய திட்டங்களைப் போலவே காப்பீட்டு திட்டங்களையும் தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி தனது முதல் ஆட்சி காலத்தில் மக்களுக்கு காப்பீடுகளுக்கான இரண்டு திட்டங்களைத் தொடங்கினார். இதில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ஆகியவை அடங்கும். இதன் மூலம், பெயரளவு பிரீமியம் செலுத்தி, 4 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெறலாம். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு, 2 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா


காப்பீட்டுக் காலத்தின் போது ஒருவர் இறந்தால், அவரைச் சார்ந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதற்காக, காப்பீடு செய்தவர் ஒவ்வொரு ஆண்டும் ரூ.436 பிரீமியம் செலுத்த வேண்டும் மற்றும் ஒரு வருடத்திற்கு (ஜூன் 1 முதல் மே 31 வரை)  காப்பீட்டிற்கான் பலனை பெறுகிறார். எஸ்பிஐ அல்லது வேறு ஏதேனும் வங்கிகள் அல்லது தபால் அலுவலகங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் பங்களிக்க தகுதியுடையவர்கள்.  காப்பீடு செய்யப்பட்ட நபர் இறந்தால் இந்த காப்பீடு ரூ.2 லட்சம்  வரை ரிஸ்க் கவரேஜை வழங்குகிறது.  


மேலும் படிக்க | பிஎஃப் கணக்கில் அதிரடி ஏற்றம், வந்தது கூடுதல் தொகை: இப்படி செக் பண்ணுங்க


பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா


காப்பீடு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதில் நாட்டில் உள்ள அனைவரும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை எடுக்க வேண்டும் என அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்தான் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகும். 18 முதல் 70 வயது வரை உள்ள ஒருவர் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் பலனைப் பெறலாம். இதையும் 2015ம் ஆண்டில் மத்திய அரசு துவக்கியது. இத்திட்டத்தின் கீழ், விபத்து மரணம் அல்லது மொத்த ஊனம் காப்பீடு ரூ.2 லட்சமும், பகுதி ஊனமுற்றோர் காப்பீடு ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற, காப்பீடு செய்தவர் ஆண்டுதோறும் ரூ.20 பிரீமியமாகச் செலுத்த வேண்டும். உங்கள் வங்கிக்குச் சென்று இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதன் பிரீமியம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் (ஜூன் 1 முதல் மே 31 வரை). PMSBY இன் பிரீமியம் வங்கியின் ஆட்டோ டெபிட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ