நாட்டில் இயற்கை எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க மத்திய அரசு பெரிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயற்கை எரிவாயு வழங்கல் மற்றும் விநியோகத்தை அதிகரிப்பதற்காக இந்தியா தனது உள்கட்டமைப்பில் 60 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 4.2 லட்சம் கோடி) முதலீடு செய்து வருவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 2030-ஆம் ஆண்டளவில் நாட்டின் எரிசக்தி தேவைகளில் இயற்கை எரிவாயுவின் பங்கை இரட்டிப்பாக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. தற்போது, ​​இயற்கை எரிவாயு நாட்டின் எரிசக்தி நுகர்வுகளில் 6.2% ஆகும்.


குறைந்த கார்பன் உமிழ்வு காரணமாக இயற்கை எரிவாயு ஒப்பீட்டளவில் சுத்தமான எரிபொருளாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் எரிசக்தி தேவைகளில் தனது பங்கை அதிகரிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச திங்க் டேங்கின் மூன்றாவது மாநாட்டில், பிரதான் நகர எரிவாயு விநியோக வலையமைப்பு விரைவில் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதத்தை உள்ளடக்கும் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முதலீடு செய்வதற்கான பங்காளிகளை அரசாங்கம் தேடுகிறது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தின் இலக்கை அடைவதில் எரிசக்தி துறை முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த சந்திப்பின் போது, ​​எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள், இந்தியா தனது எரிசக்தி தேவைகளில் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்க தொடர்ந்து முயற்சிக்கும் என்று தெரிவித்துள்ளார். "அனைத்து வகையான எரிசக்திகளுக்கும் அரசாங்கம் உடனடியாக ஒரு விரிவான எரிசக்தி கொள்கையை உருவாக்க வேண்டும். உலகளாவிய கொந்தளிப்பில் இருந்து எரிசக்தி விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் பற்றி பேசுகையில், மத்திய அமைச்சர் ஈரான் மற்றும் வெனிசுலா மீதான அமெரிக்க தடை போன்றவற்றை நாங்கள் பார்த்துள்ளோம் என்று தெவித்துள்ளார்.  


மேலும் சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீதான தாக்குதல், எரிசக்தி விநியோகத்தை சீர்குலைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், எரிசக்தி பாதுகாப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.