மோடி தலைமையிலான அரசாங்கத்தின் சமீபத்திய தொழிலாளர் மற்றும் வங்கி கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் ஜனவரி 8 புதன்கிழமை அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசாங்கத்தின் தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளுக்கு எதிரான "பாரத் பந்த்" போராட்டத்தில் பங்கேற்க பத்து மத்திய தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அரசாங்க ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் எஃகு மற்றும் ரயில்வே போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு சாட்சியாக, வரவிருக்கும் பாரத் பந்த் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் பல வங்கி தொழிற்சங்கங்களுக்கு மேலதிகமாக, பல்வேறு இடதுசாரி கட்சிகளும் வேலைநிறுத்தத்திற்கு தங்கள் ஆதரவை அளித்துள்ளதாக கூளப்படுகிறது.


  • பாரத் பந்தின் போது அடைக்கப்படும் / திறந்திருக்கும் அங்கங்கள் என்ன?


பாரத பந்த் வேலைநிறுத்தம் அரசாங்கத்தின் புதிய வங்கி சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், பல வங்கி தொழிற்சங்கங்கள் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, ஜனவரி 8-ஆம் தேதி வங்கி சேவைகள் தடைப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) கடந்த வாரம் வேலைநிறுத்தம் அதன் செயல்பாடுகளில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும் என்று அறிவித்திருந்தது. வங்கி நடவடிக்கைகளின் சீரான செயல்பாட்டை உறுதிசெய்தாலும், வேலைநிறுத்தத்தால் அதன் அலுவலகங்கள் பாதிக்கப்படக்கூடும் என்று சிண்டிகேட் வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா எச்சரித்துள்ளன.


சில இடங்களில் ATM சேவைகளும் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. அதேவேளையில் NEFT  போன்ற ஆன்லைன் வங்கி சேவைகள் சாதாரணமாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படக்கூடும், ஆனால் இதுவரை இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் ஏதும் வெளியாகவில்லை. வேலைநிறுத்த நாளில் பொதுப் போக்குவரத்து செயல்படுத்தப்படுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை, ஆனால் பதட்டங்கள் போக்குவரத்தின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்களுக்கும் இதே நிலைமை தான்.


  • பாரத் பந்தில் பங்கேற்கும் தொழிற்சங்கங்கள்


இந்த போராட்டத்தில் பங்கேற்கும் மத்திய தொழிற்சங்கங்கள்... அகில இந்திய ஐக்கிய தொழிற்சங்க மையம் (AIUTUC), இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU), அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC), ஹிந்த் மஜ்தூர் சபா (HMS), சுயதொழில் மகளிர் சங்கம் (SEWA), அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில் (AICCTU), தொழிலாளர் முற்போக்கு கூட்டமைப்பு (LPF), ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் (UTUC), இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) மற்றும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் (TUCC) ஆகியன ஆகும். வேலைநிறுத்தத்தில் 20 கோடி ஆர்ப்பாட்டக்காரர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வங்கித் துறையில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA), அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (AIBOA), இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (BEFI), இந்திய தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (INBEF), இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ் (INBOC) மற்றும் வங்கி கர்மாச்சாரி சேனா மகாசங் (BKSM) ஆகியன வேலைநிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக இந்திய வங்கியின் சங்கம் SBI-க்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.


  • கோரிக்கைகள் என்ன?


பாரத் பந்த் வேலைநிறுத்தத்தை அழைப்பதற்கான முதன்மை நோக்கம், 44 தொழிலாளர் சட்டங்களை (ஊதியங்கள், தொழில்துறை உறவுகள், சமூக பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான பணி நிலைமைகள் என) நான்கு குறியீடுகளாக இணைக்க முன்மொழியப்பட்ட தொழிலாளர் சீர்திருத்தங்களை கைவிட அரசாங்கத்தை அனுமதிப்பதாகும், இதன் விளைவாக பெருநிறுவன ஊழியர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


கூடுதலாக, தொழிற்சங்கங்கள் குறைந்தபட்ச ஊதியத்தை மாதத்திற்கு ரூ.21,000 முதல் ரூ.24,000 வரை உயர்த்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை நிறுத்தவும், CAA, NRC மற்றும் NPR ஆகியவற்றை ரத்து செய்யவும் கோருகின்றன. 


முன்னதாக அரசாங்கத்திற்கும் - தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றதால், தொழிற்சங்கங்கள் எழுப்பிய கவலைகள் எதுவும் விவாதிக்கப்படாததால் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.