FD-ன் சில பிரிவுகளில் வட்டி விகிதங்களை மாற்றியது SBI: முழு விவரம் உள்ளே!!
நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) செப்டம்பர் 10 முதல், சில பிரிவுகளில் நிலையான வைப்புத்தொகையில் வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.
புதுடில்லி: நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) செப்டம்பர் 10 முதல், சில பிரிவுகளில் நிலையான வைப்புத்தொகையில் (Fixed Deposit) வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.
SBI நிலையான வைப்பு வட்டி விகிதங்களை மே 27 மற்றும் மே 12-ல் குறைத்தது.
புதிய வட்டி விகிதங்கள் (Interest Rates), செப்டம்பர் 10 முதல் நடைமுறைக்கு வரும். புதிய வைப்பு மற்றும் மெச்யூராகும் வைப்புத்தொகைகளுக்கு இந்த புதிய விகிதங்கள் பொருந்தும்.
ALSO READ: ஓய்வு பெறுவதற்கு முன்னர் PF பணத்தை எடுப்பது சரியானதா?... தெரிந்து கொள்ளுங்கள்!!
"சில்லறை உள்நாட்டு கால வைப்பு மீதான வட்டி விகிதங்களில் திருத்தம் ஏற்பட்டுள்ளது. (ரூ. 2 கோடிக்கு கீழே) 10.09.2020 முதல் வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டன. அதன்படி, 'இரண்டு கோடிக்கு கீழே' உள்ள சில்லறை உள்நாட்டு கால வைப்புத்தொகையின் வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளன," என்று SBI இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய விகிதங்களின் பட்டியல்:
கால அளவு | பொது மக்களுக்கான தற்போதைய விகிதம் w.e.f. 27.05.2020 | பொது மக்களுக்கான மாற்றப்பட்ட விகிதம் c w.e.f. 10.09.2020 | மூத்த குடிமக்களுக்கான தற்போதைய விகிதம் w.e.f. 27.05.2020 | மூத்த குடிமக்களுக்கான மாற்றப்பட்ட விகிதம் w.e.f. 10.09.2020 |
---|---|---|---|---|
7 days to 45 days | 2.90 | 2.90 | 3.40 | 3.40 |
46 days to 179 days | 3.90 | 3.90 | 4.40 | 4.40 |
180 days to 210 days | 4.40 | 4.40 | 4.90 | 4.90 |
211 days to less than 1 year | 4.40 | 4.40 | 4.90 | 4.90 |
1 year to less than 2 year | 5.10 | 4.90 | 5.60 | 5.40 |
2 years to less than 3 years | 5.10 | 5.10 | 5.60 | 5.60 |
3 years to less than 5 years | 5.30 | 5.30 | 5.80 | 5.80 |
5 years and up to 10 years | 5.40 | 5.40 | 6.20 | 6.20 |
மூத்த குடிமக்களுக்கான (Senior Citizens) சிறப்பு “SBI Wecare” வைப்புத்தொகை, Retail TD பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 30 bps கூடுதல் பிரீமியம் (மேலே உள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ளபடி தற்போதுள்ள 50 bps மற்றும் அதற்கு மேல்) மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும். '5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு’ மட்டுமே அவர்களின் Retail TD-ல் இது வழங்கப்படும். "SBI Wecare” வைப்புத் திட்டம் 2020 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று SBI வலைத்தளம் தெரிவித்துள்ளது.
"SBI பணியாளர்கள் மற்றும் SBI ஓய்வூதியதாரர்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதம் பொருந்தக்கூடிய விகிதத்திற்கு மேல் 1.00% ஆக இருக்கும். 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்கள் மற்றும் SBI ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த வகையில் உள்ள மற்றவர்களை விட வட்டி விகிதம் 0.5% அதிகமாக கிடைக்கும். அதாவது, SBI-ன் இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்கள், பணியாளர்களுக்கான நன்மைகள் (1%) மற்றும் இந்திய மூத்த குடிமக்களின் நன்மைகள் (0.50%) ஆகிய இரு நன்மைகளையும் பெறுவார்கள்”என்று இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ALSO READ: 9.95 % வட்டி கிடைக்கும் தேசிய பென்ஷன் திட்டம் ...!!!