Covid Side Effects: கோவிட் பாதிப்பு வீடுகளின் விலையையும் பாதிக்கும்
கோவிட் நோயின் பாதிப்பினால், வீடுகளின் விலையும் கிடுகிடுவென உயரும் என்ற கணிப்பு மக்களின் கவலைகளை அதிகரித்துள்ளது! கட்டிக் கொண்டிருக்கும் வீடுகளின் விலை 10% அதிகரிக்கும், திட்டம் தாமதமாகும் என கூறப்படுகிறது.
கோவிட் நோயின் பாதிப்பினால், வீடுகளின் விலையும் கிடுகிடுவென உயரும் என்ற கணிப்பு மக்களின் கவலைகளை அதிகரித்துள்ளது! கட்டிக் கொண்டிருக்கும் வீடுகளின் விலை 10% அதிகரிக்கும், திட்டம் தாமதமாகும் என கூறப்படுகிறது.
ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் அமைப்பான கிரெடாய் நடத்திய ஆய்வில், வீடு வாங்குபவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய அடியை அளித்துள்ளது. எதிர்வரும் நாட்களில், வீடு வாங்குபவர்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
Also Read | ஒரு தங்க நாணயத்தின் விலை 138 கோடி ரூபாயா? Too much!
ஏற்கனவே கட்டுமானத்தில் இருக்கும் திட்டங்களும் தாமதமாகும். நாட்டின் மிகப்பெரிய டெவலப்பர்கள் அமைப்பான CREDAI இன் ஆய்வில், சொத்து விலைகள் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வீடு வாங்க திட்டமிட்டவர்கள், தங்கள் முதலீடு செய்யும் யோசனையை ஒத்திவைப்பதாக டெவலப்பர்கள் கூறுகின்றனர். இது தவிர, வீட்டுக்கடன் பெறுவதிலும் சிக்கல்கள் உள்ளன. பழைய கடனை திருப்பிச் செலுத்துவதும் கடினமாகி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், ரியல் எஸ்டேட் துறை முடங்காமல் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று CREDAI கேட்டுக் கொண்டுள்ளது.
CREDAI கணக்கெடுப்பின்படி, நாட்டில் 92 சதவீத டெவலப்பர்கள் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். 83% டெவலப்பர்கள் 50% க்கும் குறைவான பணியாளர்களுடன் பணிபுரிகின்றனர். அதேசமயம், கோவிட்டின் இரண்டாவது அலை காரணமாக கட்டுமானத் திட்டம் தாமதமாகும் என்றும் கூறப்படுகிறது. 88 சதவீத அடுக்கு மாடி குடியிருப்புகளின் விலை 10 சதவீதம் அதிகரிக்கும்.
Also Read | 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய தேவையில்லை
82 சதவீத பில்டர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் திட்ட ஒப்புதல்கள் பெறப்படவில்லை என்று கூறியுள்ளனர். 77% பில்டர்கள் கடனை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
ரியல் எஸ்டேட்டின் சமீபத்திய நிலைமைகள் குறித்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெவலப்பர்களிடையே CREDAI ஒரு உள் கணக்கெடுப்பை நடத்தியது. 'கிரெடாய் நேஷனல் ரிசர்ச்' ('Credai National Research') என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 4800க்கும் மேற்பட்ட டெவலப்பர்கள் கலந்து்க் கொண்டனர்.
98 சதவீதம் பேர் வீடு வாங்குபவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று கணக்கெடுக்கப்பில் கலந்துக் கொண்ட டெவலப்பர்களில் பெரும்பாலானோர் கூறியுள்ளனர். வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் விசாரணைகள் 75 சதவிகிதம் குறைந்துவிட்டதாக 42 சதவீத டெவலப்பர்கள் கூறுகின்றனர். 95% வாடிக்கையாளர்கள் வீடு வாங்குவதற்கான முடிவை ஒத்திவைத்துள்ளனர்.
Also Read | குழந்தைகளின் கண்பார்வையை மேம்படச் செய்யும் உணவுகள்
டெவலப்பர்களில் 69 சதவீதம் பேர் கடன்களைப் பெறுவதிலும் சிக்கல் இருப்பதாக கூறுகின்றனர். அதேபோல், வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் கிடைப்பதற்கும் சிக்கல்கள் இருப்பதாகக் கூறினர்.
கோவிட்டின் இரண்டாவது அலை, முதல் அலையை விட அதிக சேதத்தை ஏற்படுத்தியதாக 90 சதவிகித டெவலப்பர்கள் நம்புகின்றனர். 'கிரெடாய் நேஷனல் ரிசர்ச்' ('Credai National Research') என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு 24 மே 2021 முதல் 3 ஜூன் 2021 வரை மேற்கொள்ளப்பட்டது.
ரியல் எஸ்டேட்டில் தேவையை அதிகரிக்க அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கணக்கெடுப்பில் கலந்துக் கொண்ட பில்டர்கள் நம்புகின்றனர். முத்திரைத்தாள் வரி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று அவர்களில் 78 சதவீதம் பேர் கூறுகின்றனர். இது தேவையை அதிகரிக்க உதவும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஜிஎஸ்டியின் கீழ் உள்ளீட்டு வரிக் கடன் திட்டத்தின் நிதி வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என்று 75 சதவீத டெவலப்பர்கள் நம்புகின்றனர்.
கடன் மறுசீரமைப்பு நிதி நெருக்கடியை மேம்படுத்தும் என்று 66 சதவீதம் பேர் கூறுகின்றனர். திட்டத்தின் செலவு அதிகரிப்பதே மிகப்பெரிய சிக்கல். அனைத்து திட்ட ஒப்புதல்களுக்கும் ஒற்றை சாளர அனுமதி கொடுக்க வேண்டும். இது திட்டங்களை விரைவாக தயார் செய்யும் என்பது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Also Read | June 10th: மதுரையின் மைந்தன் சுந்தர் பிச்சையின் பிறந்த நாள் இன்று
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR