நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வர இருப்பதால், தீபாவளிக்கு போனஸ் எவ்வளவு அறிவிக்கப்படும் என்று பணிபுரியும் ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி, அரசுத் துறையில் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தீபாவளி போனஸ் எவ்வளவு என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது முதலாளிகள் அளிக்கும் போனஸ் என்றால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பண்டிகைக்காலத்தில் அரசு கொடுக்கும் உணவு பொருட்கள் எவ்வளவு என்றும் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் ரேஷன் அட்டைதாரர்கள் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற முக்கியமான பண்டிகைகளில் ரேஷன் பொருட்களை இலவசமாக பெறுவதுண்டு.


அந்த வகையில், இந்த தீபாவளிக்கு தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான புதுச்சேரி அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சர்க்கரை மற்றும் அரிசி வழங்குவதற்கு பதிலாக, அதற்கு ஈடான தொகையாக ரூ.490 தீபாவளி பரிசு வழங்க இருப்பதாக செய்தி வெளியானது.


மேலும் படிக்க | தீபாவளி போனஸ்!! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி... அறிவிப்பு வெளியானது!!


புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு அறிவித்த 490 ரூபாய் தொகை, அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று புதுச்ச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்படுவது வழக்கம்.


அதுபோல, புதுச்சேரியில்  தீபாவளி இலவச ரேஷன் பொருட்களின் தொகுப்பிற்கு பதிலாக, ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்குகளில் ரூ.490 செலுத்தப்படும் என புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.


புதுச்சேரி மாநில அரசு ரேஷன் தொகுப்பு


ரேஷன் கடைகளில் வழங்கப்படும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு ஆகும் தொகையாக 490 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதன்படி, 3 லட்சத்து 37 ஆயிரத்து 406 குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குகளில் சுமார் 16.53 கோடி ரூபாயை புதுச்சேரி மாநில அரசு டெபாசிட் செய்யும்.


 


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளிக்கு டிபிடி முறையில் (DBT mode) இலவச அரிசி, சர்க்கரைக்கு இணையான ரொக்கம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை, புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குநர் (Director of Civil Supplies and Consumer Affairs) எஸ்.சத்தியமூர்த்தி நவம்பர் 7ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளார்.


மேலும், நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், 3.37 லட்சம் குடும்ப ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.490 நேரடிப் பலன் பரிமாற்ற முறையில் வழங்கப்படும் என்று தெரிவித்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு இந்த தொகை செலுத்தப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


கடந்த காலங்களில் நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி மற்றும் சர்க்கரையை விநியோகம் செய்து வந்தது. இனி வரும் தீபாவளி பண்டிகைக்கு இலவச அரிசி மற்றும் சர்க்கரைக்கு இணையான ரொக்கம் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் செலுத்தப்படும் என்று தெரிகிறது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரும் லாபகரமான் மாற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ