RD கணக்கு மூலம் சேமிப்பவரா நீங்கள்! மறந்தும் இந்த தவறை செய்ய வேண்டாம்! ஜாக்கிரதை....
வங்கியில் தொடர் வைப்புத் திட்டம் என்பது மிகவும் சிறந்த சேமிப்பு திட்டம் என்றாலும், சில தவறுகள் இழப்பைக் கொடுக்கும்...
Bank Recurring Deposit: வங்கிகளின் தொடர் வைப்புத்தொகை (RD) சிறு சேமிப்புகளுக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த வழி. இந்தக் கணக்கை நீங்கள் எந்த வங்கியிலும் அல்லது தபால் நிலையத்திலும் தொடங்கலாம்.
RD மூலம், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் தவணை முறையில் டெபாசிட் செய்ய வேண்டும். பெரும்பாலும் கணக்கு வைத்திருப்பவர்கள் உரிய தேதியில் தவணையை ஆர்டியில் டெபாசிட் செய்ய மறந்து விடுவார்கள். இதன் விளைவாக கணக்கு வைத்திருப்பவர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
RD தவணை குறிப்பிட்ட தேதியில் டெபாசிட் செய்யப்படுகிறது
ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்ய வேண்டிய தொகை, தேதி மற்றும் வட்டி விகிதங்கள் தொடர் வைப்பு (RD) கணக்கைத் திறக்கும் நேரத்திலேயே முடிவாகிவிடுகிறது.
வாடிக்கையாளர் அவரவர் வசதிக்கேற்ப, அவர் எத்தனை ஆண்டுகளுக்கு இந்தக் கணக்கை வைக்கலாம் என்று முடிவு செய்யலாம்.
ALSO READ | அபாயம் இல்லாமல் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா?
SBIஇன் தொடர் வைப்புத் திட்டத்தில், குறைந்தபட்சம் 1 வருடம் மற்றும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை கணக்கைத் திறக்கலாம். குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூபாய் 100 மற்றும் அதன் பிறகு ரூபாய் 10 இன் மடங்குகளில் டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச வைப்புத்தொகைக்கு எந்த வரம்பு இல்லை.
அபராதம்
குறிப்பிட்ட தேதியில் RD தவணையை டெபாசிட் (Deposit the installment) செய்யாததற்காக வங்கி அபராதம் விதிக்கலாம். இதற்கு ஒவ்வொரு வங்கிக்கும் வெவ்வேறு விதிமுறைகள் உள்ளன.
எஸ்பிஐயில், நீங்கள் 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கு ஆர்டி செய்து, சரியான நேரத்தில் தவணை செலுத்தாவிட்டால், 100 ரூபாய்க்கு ரூ.1.50 அபராதம் செலுத்த வேண்டும்.
அதே நேரத்தில், 5 ஆண்டுகளுக்கு மேலான கால வரம்பு கொண்ட கணக்குக்கு, இந்த அபராதம் 100 ரூபாய்க்கு 2 ரூபாய். அதே நேரத்தில், தொடர்ந்து 6 தவணைகள் டெபாசிட் செய்யப்படாவிட்டால், வங்கி கணக்கை முடித்துவிட்டு மீதமுள்ள தொகையை கணக்கு வைத்திருப்பவருக்கு கொடுக்கும். சரியான நேரத்தில் பணத்தை டெபாஸிட் செய்யாவிட்டால், இந்தத் தவறு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
ALSO READ | மாதம் 2 ஆயிரத்தை ரூபாய் டெபாசிட் செய்தால் லட்சங்கள் கிடைக்கும்!
மிக நேரடியான மற்றும் எளிமையான வழி என்னவென்றால், நீங்கள் RD தவணையை உரிய தேதியில் டெபாசிட் செய்வது மட்டுமே, அப்போதுதான் அபராதம் எதுவும் விதிக்கப்படாது. இதற்கு வங்கியின் ஆட்டோ டெபிட் வசதியைப் பயன்படுத்தலாம்.
இதில், உங்கள் சேமிப்புக் கணக்கில் இருந்து ஒவ்வொரு மாதமும் RD தொகை டெபாசிட் செய்யப்படும். அதற்காக நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஆனால் தவணை தேதியில் உங்கள் கணக்கில் போதுமான இருப்பு உள்ளதா என்பதை மட்டும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
RD இல் கடன் வசதி
ரெக்கரிங் டெபாசிட் (RD) கணக்கைத் திறந்திருந்தால், தேவைப்படும்போது கடன் அல்லது ஓவர் டிராஃப்ட் வசதியையும் பெறலாம். தொடர் வைப்புத்தொகையின் முதிர்ச்சியின் போது கிடைக்கும் வட்டிக்கு வரி (Interest Income) விதிக்கப்படும். வருமான வரி விதிகளின்படி, கணக்கு வைத்திருப்பவர்கள் 15G/15H படிவத்தை சமர்ப்பித்து வரி விலக்கு பெறலாம்.
ALSO READ | Post office சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR