உலகின் மிக விலையுயர்ந்த நாணயம் என்ற சாதனையை உருவாக்கியுள்ளது அரிய அமெரிக்க தங்க நாணயம். இதற்கு முன்னதாக 1794ஆம் ஆண்டின் Hair silver dollar தான் உலகின் விலையுயர்ந்த நாணயமாக இருந்தது. இது 2013 இல் 10 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பார்ப்பதற்கு எளிமையாக தோன்றும் சில பொருட்கள் மிகவும் அதிகமான மதிப்பைக் கொண்டுள்ளதாக இருக்கும். அந்த வகையில் அமெரிக்க தங்க நாணயம் ஒன்று தனித்துவமான சிறப்பைக் கொண்டுள்ளது. இந்த நாணயம் ஆரம்பத்தில் $ 20 நாணயம் என்றும் இந்திய மதிப்பில் 1400 ரூபாய் என்றும் கருதப்பட்டது, ஆனால் செவ்வாயன்று (2021, ஜூன் 08) நியூயார்க்கில் 18.9 மில்லியன் டாலர் (138 கோடி ரூபாய்) என்ற அதிகபட்ச விலைக்கு விற்கப்பட்டது! 


Also Read | உங்களிடம் இந்த ஒரு ரூபாய் நாணயம் இருக்கிறதா? இதோ 10 கோடி பிடியுங்கள் கோடீஸ்வரரே!


இதே நாணயம், 2002 ஆம் ஆண்டில் 7.6m டாலர் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.  தற்போது, இந்த நாணயத்தின் விற்பனைக்கு முந்தைய மதிப்பீடு 10 முதல் 15 மில்லியன் டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், விற்பனையிலோ, மதிப்பீடுகளை தாண்டி உலகின் மிக விலையுயர்ந்த நாணயத்திற்கான சாதனையையும் முறியடித்தது. இதற்கு முன்னதாக 1794ஆம் ஆண்டின் Hair silver dollar தான் உலகின் விலையுயர்ந்த நாணயமாக இருந்தது. இது 2013 இல் 10 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.  


இந்த நாணயத்தின் தனித்துவத்திற்கு காரணம் என்ன ?


இந்த 1933 டபுள் ஈகிள் அமெரிக்காவின் கடைசி தங்க நாணயம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் இது நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்தது. இருப்பினும், ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் (Franklin D. Roosevelt) அமெரிக்காவை தங்கத் தரத்திலிருந்து நீக்கிய பின்னர் இந்த் வகை நாணயம் வெளியிடுவதும் நிறுத்தப்பட்டது.   


Also Read | World Record on Child Birth: ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்ற மகராசி 


ஸ்மித்சோனியன் நிறுவனத்திற்கு (Smithsonian Institution) வழங்கப்பட்ட இரண்டு நாணயங்கள் தவிர, அனைத்தையும் அழிக்குமாறு அரசு உத்தரவிட்டது. அமெரிக்க அரசாங்கத்தால் தனியார் உடைமைக்கு "சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட" ஒரே நாணயம் இது. என்பது தான் இதன் சிறப்பு அரிதானது.


அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கடைசி தங்க நாணயம் 1933 டபுள் ஈகிள் நாணயம் என்று கூறும் சோத்தேபி ஏல நிறுவனம் (Auction house Sotheby), இது "உலகின் மிகவும் விரும்பப்படும் நாணயங்களில் ஒன்றாகும்" என்று கூறுகிறது.


Also Read | Danger! வீட்டைச் சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்களால் ஆபத்து!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR