கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் (Maharashtra) நிறைய சேதங்கள் ஏற்பட்டன. மகாராஷ்டிராவில், வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகள் நிறைய பாதிக்கப்பட்டனர். பயிர் சேதம் காரணமாக, சந்தையில் வெங்காய சப்ளை குறையத் தொடங்கியது, இதன் காரணமாக வெங்காயத்தின் விலை குறையவில்லை, என்பதோடு, அவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது, ​​வெங்காய விலை சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெங்காய இறக்குமதி 50-60 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக, மும்பை (Mumbai), புனே மற்றும் தானே ஆகிய இடங்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. சில்லறை சந்தையில் வெங்காய சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு 50-60 ரூபாயை எட்டியுள்ளது. இது தவிர, வெங்காயத்தின் மொத்த விலையும் ஒரு கிலோ ரூ.40-45 ஐ எட்டியுள்ளது.


மறுபுறம், மண்டியில் வெங்காயத்தின் சப்ளை கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துள்ளது. சில்லறை மற்றும் மொத்த விற்பனையில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம்.


மேலும், புனேவில் உள்ள குல்டெக்கரி சந்தையை தினமும் சுமார் 170-220 லாரிகள் என்ற வகையில் வெங்காயம் வரும். தற்போது 70-80 லாரிகள்  அளவிற்கு மட்டுமே வருகின்றன.  கடந்த வாரம் முதல், வெங்காய சப்ளை குறைந்துள்ளது. தற்போது, ​​மொத்த விலையில் 10 கிலோ வெங்காயம் 300-400 ரூபாய் என்ற அளவில் கிடைக்கிறது.


விநியோக தடைகள் காரணமாக, நாட்டின் மிகப்பெரிய மொத்த வெங்காய சந்தையான லாசல்கானில் வெங்காயத்தின் மொத்த விலை  கடந்த 10 நாட்களில் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் வலைத்தளத்தின்படி, சில்லறை விற்பனையில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ .54 என்ற அளவில் உள்ளது


இதேபோல், தமிழ்நாட்டில் (Tamil Nadu) பருவமழை பெய்யாத மழை காரணமாக, வெங்காய பயிர் சேதமடைந்துள்ளது.  ஜனவரி மாதம் கர்நாடகாவிலிருந்து வெங்காய சப்ளை தொடங்கியது, ஆனால் பயிர் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்ததால், அதிக சப்ளை இல்லை. இப்போது இரண்டாவது கால பயிரிலிருந்து பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் இருந்து வெங்காயம் வரத் தொடங்கும்.


இதற்கிடையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை  கடந்த ஒரு வருடத்தில் லிட்டருக்கு சுமார் ரூ .15 முதல் 20 வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சரக்கு கொண்டு வரும் செலவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது, இதன் பாதிப்பு  இப்போது பொருட்களின் விலையில் தெரிகிறது. 


இத்தகைய சூழ்நிலையில், வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும். மார்ச் மாதத்தில் கர்நாடகாவிலிருந்து சப்ளை வந்த பின்னரே விலைகள் குறையக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


ALSO READ | Gold Rate: தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு; தங்கம் விலை ₹10,000 குறைந்தது


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR