RBI New Rule: இந்திய ரிசர்வ் வங்கி அடமானம் அல்லது உத்திரவாதம் அல்லாத கடன்களின் எண்ணிக்கை பெருகுவதை கட்டுப்படுத்த, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் தனிநபர் கடன்களுக்கான இடர் அம்ச அளவீடுகளை 25 சதவீத புள்ளிகளாக அதிகரித்தது. அதாவது வங்கிகளும் NBFC களும் அத்தகைய கடன்களை கொடுக்கும் போது அதிக மூலதனத்தை ஒதுக்க வேண்டும். அடமானம் அல்லது உத்திரவாதம் இல்லாத கடன்களில் தனிநபர் கடன்கள், கிரெடிட் கார்டு கடன்கள் ஆகியவை அடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கியின் புதிய விதியின் காரணமாக சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு செய்தியாக, தனிநபர் கடன்கள் (Personal Loan) மீதான வட்டி விகிதங்கள் அதிகரிக்க கூடும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில்  கடந்த நவம்பர் மாதம், இந்திய ரிசர்வ் வங்கி கடன் தொடர்பான சில விதிகளில் செய்த மாற்றத்தின் காரணமாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சில சிக்கல்களை எதிர்கொள்வதால், உங்கள் மீதான வட்டி விகிதங்கள் அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது.


இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதியின்படி, அடமானம் அல்லது உத்தரவாதம் இல்லாத கடன்கள் மீதான ரிஸ்க் விகிதத்தை 100% என்ற அளவில் இருந்து 125% என்ற அளவில் அதிகரித்துள்ளது. இதனால் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள், தாங்கள் கொடுக்கும் அடமானம் அல்லாத கடன் தொகையில் 125 சதவீத அளவிலான மூலதனத் தொகையை தொகையை ஒதுக்கி வைத்திருக்க வேண்டும். இந்த புதிய விதிகளை, 2024 பிப்ரவரி 29 ஆம் தேதிக்குள் அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.


மேலும் படிக்க | குறைந்த வட்டியில் கடன் வாங்கணுமா... CIBIL ஸ்கோரை அதிகரிக்க செய்ய வேண்டியவை!


உதாரணத்துடன் விளக்க வேண்டும் என்றால், வங்கிகள் கொடுக்கும் ஒவ்வொரு நூறு ரூபாய் தனிநபர் கடனுக்கும், மதிப்பீடு செய்யும் ரிஸ்க் நிறைந்த சொத்துக்கள் ரூபாய் நூறாக இருந்தது. தற்போது புதிய விதியின் படி ஒவ்வொரு நூறு ரூபாய் தனி நபர் கடனுக்கும் 125 ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள். இதனால் வங்கிகளால் கொடுக்கப்படும் தனிநபர் கடனின் அளவு குறைவதோடு, செலவுகள் அதிகரித்து, கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புதிய விதியின் காரணமாக, வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன்களின் வட்டி விகிதங்கள் 0.020% முதல் 1.5% என்ற அளவில் அதிகரிக்க பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். 


சமீப காலமாக, வங்கிகள் மூலம் உத்தரவாதமில்லாத கடன்கள் அளிப்பது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கி, 2023-24 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் அதன் தனிநபர் கடன் போர்ட்ஃபோலியோ அளவு 15.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.78 லட்சம் கோடியாக உள்ளது.  அதே போன்று, ஐசிஐசிஐ வங்கியின் தனிநபர் கடன் அளவுகள் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 40 சதவீதம் அதிகரித்து ரூ.1.04 லட்சம் கோடியாகவும், கிரெடிட் கார்டு கடன்கள் 29.5 சதவீதம் அதிகரித்து ரூ.43,230 கோடியாகவும் உள்ளது. கோடக் மஹிந்திரா வங்கியின் அடமானம் இல்லாத தனிநபர் கடன் அளவுகள் 50 சதவீதம் உயர்ந்து ரூ.38,311 கோடியாக உள்ளது.


மேலும் படிக்க | அறிவிக்கப்படாத கட்டண வசூல்! வெட்ட வெளிச்சமான Google payஇன் தகிடுதத்தங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ