EPF Interest Calculation: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது இந்தியாவில் உள்ள பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகு ஊழியர்களுக்கு வலுவான நிதி பாதுகாப்பை அளிக்கும் ஒரு திட்டமாகும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நடத்தப்படும் இந்த திட்டம், ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, மாதாந்திர ஓய்வூதிய வடிவில் ஒரு மொத்தத் தொகையை வழங்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு ஊழியர் தனது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் (Dearness Allowamce) 12 சதவீதம் வரை தங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) பங்களிக்க முடியும். பணியாளர் பங்களிக்கும் அதே அளவு தொகையை நிறுவனமும் இபிஎஃப் கணக்கில் பங்களிக்கின்றது. நிறுனவத்தின் தரப்பில் இருந்து குறைந்தபட்ச பங்களிப்பு ரூ. 1,800 ஆக இருக்க வேண்டும், அதிகபட்சமாக 12 சதவீத பங்களிப்பில், 8.33 சதவீதம் ஊழியரின் EPF க்கும், 3.67 சதவீதம் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்துக்கும் (EPS) செல்கிறது.


2023-24 நிதியாண்டிற்கான சமீபத்திய வட்டி விகிதம் பிப்ரவரி 2024 இல் CBT வாரியத்தால் அறிவிக்கப்பட்டது. அப்போது வட்டி விகிதம் (Interest Rate) 8.25% ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு முன்பு வட்டி விகிதம் 8.15 சதவீதமாக இருந்தது.


EEE வகை (EEE category)


- வைப்புத்தொகை, சம்பாதித்த வட்டி மற்றும் திட்ட முடிவில் திரும்பப் பெறும் தொகை ஆகியவற்றுக்கு வரி விலக்கின் பலனை வழங்கும் சில வகைகளில் EPF ஒன்றாகும்.


- உத்தரவாதமான வருமானத்தை அளிக்கும் இந்த திட்டம் விலக்கு-விலக்கு-விலக்கு (EEE) வகையின் கீழ் வருகிறது.


- ஒரு நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டாலும், இந்த திட்டத்தில் பெறப்படும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு முற்றிலும் வரி இல்லை.


EPFO: EPF இருப்பு மற்றும் பெறப்பட்ட வட்டியை செக் செய்வது எப்படி? 


- இபிஎஃப் இருப்பை (EPF Balance) ஆன்லைன் ஆஃப்லைன் என இரு வழிகளிலும் செக் செய்யலாம். 
- ஆன்லைனில் இபிஎஃப்ஓ இணையதளம் (EPFO Website), உமங் செயலி (UMANG App) ஆகிய வழிகளில் சரிபார்க்கலாம்.
- ஆஃப்லைனில், மிஸ்டு கால் மூலமாகவும், SMS மூலமும் இதை தெரிந்துகொள்ளலாம். 


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக், முக்கிய அப்டேட்....மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் குட் நியூஸ்


EPFO போர்ட்டலுக்கு (www.epfindia.gov.in) செல்லவும்.


- E-PassBook ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
- UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு புதிய பக்கத்தில் லாக் இன் செய்யவும்.
- லாக் இன் செய்த பிறகு, Member ID option for Passbook விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- பாஸ்புக் PDF வடிவத்தில் கிடைக்கும், அதை பதிவிறக்கம் செய்யலாம்.
- https://passbook.epfindia.gov.in/ என்ற இணையதளத்தில் பாஸ்புக்கை நேரடியாகவும் காணலாம்.


ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் இபிஎஃப் பங்களிப்புகளுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?


- தற்போது இபிஎஃப் -க்கு 8.25 சதவீதம் வட்டி அளிக்கப்படுகின்றது. ஒரு இபிஎஃப் சந்தாதாரர் (EPF Subscriber) தனது கணக்கில் ரூ.5 லட்சம் பங்களிப்பு அளித்திருந்தால், அவருக்கு வட்டியாக ரூ.41,250 கிடைக்கும். மேலும் அவரது  முதிர்வுத் தொகை ரூ.5,41,250 ஆக இருக்கும்.


- இபிஎஃப் உறுப்பினரின் (EPF Member) பங்களிப்பு ரூ.10 லட்சமாக இருந்தால், மொத்த வட்டியாக ரூ.82,500 கிடைக்கும். மேலும் மொத்த முதிர்வுத் தொகை ரூ.10,82500 ஆக இருக்கும்.


- இபிஎஃப் பங்களிப்பு ரூ.15 லட்சமாக இருந்தால், மொத்த வட்டியாக ரூ.1,23,750.00 கிடைக்கும். மொத்த முதிர்வுத் தொகை ரூ.16,23,750 ஆக இருக்கும். 


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு NDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ