வருங்கால வைப்பு நிதி: ஊதியம் பெருபவர்களின் ஊதியத்தில் ஒரு பகுதி பிஎஃப் ஆக கழிக்கப்படுகிறது. சேவைத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு பிஎஃப் கணக்கு மூலமே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பிஎஃப் பணத்தில் இருந்து காப்பீடு வசதியும் கிடைக்கிறது. இதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது?  இந்த காப்பீட்டின் பணத்தை எடுக்க யாருக்கெல்லாம் தகுதி உண்டு? இவை அனைத்தை பற்றியும் இந்த பதிவில் விரிவாக காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காப்பீட்டுத்  திட்டம் 


இந்த வசதி இபிஎஃப்ஓ மூலம் வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ள, நீங்கள் இபிஎஃப்ஓ-​​இல் உறுப்பினராக இருக்க வேண்டும். இதற்காக, நீங்கள் தனியாக எங்கும் செல்ல வேண்டியதில்லை. நீங்கள் பணி புரியும் நிறுவனம் அல்லது அமைப்பே இந்த வசதியை வழங்குகிறது. இதை அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களிடம் பிஎஃப் கணக்கு இருந்தால், ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் இருந்து ஒரு தொகை இந்த வருங்கால வைப்பு நிதிக்கு செல்லும். இதன் மூலம் உங்கள் குடும்பம் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளத் தகுதி பெறுகிறது.


இதற்கான தகுதிகள் என்ன?


இபிஎஃப்ஓ-இல் உறுப்பினராக இருக்கும் அனைத்து பணியாளர்களின் குடும்பத்திற்கும் இபிஎஃப்ஓ ​​ஆல் காப்பீட்டுத் திட்டத்தின் பலன் வழங்கப்படுகிறது. உடல்நலக்குறைவு அல்லது விபத்து காரணமாக இபிஎஃப்ஓ ​​உறுப்பினர் திடீரென மரணம் அடைந்தால், அவரது குடும்பம் ரூ. 7 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையைப் பெறுகிறது. இருப்பினும், இதற்கு, இபிஎஃப்ஓ ​​உறுப்பினர் தொடர்ந்து 12 மாதங்கள் சேவைக் காலத்தில் இருந்திருப்பது அவசியமாகும். எனினும், பணியாளர் ஒரே இடத்தில் வேலை செய்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. 


மேலும் படிக்க | ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யணுமா? ஆன்லைனிலேயே செய்யலாம் 


இந்த காப்பீட்டின் பலன் ஒரு வருடத்திற்குள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கும் கிடைக்கும். இந்த காப்பீட்டை பயன்படுத்திக் கொள்ள, புதிய அலுவலகத்தின் சம்பளத்திலிருந்து வருங்கால வைப்பு நிதிக்கான பணம் பிடித்தம் செய்யப்பட்டது தொடர்பான தகவல்கள் இபிஎஃப்ஓ-​​இன் ஆவணங்களில் இருக்க வேண்டும்.


யார் உரிமை க்ளைம் செய்ய முடியும்?


ஊழியர் திடீரென மரணம் அடைந்தால், அந்த ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் இந்தக் காப்பீட்டைப் பெறலாம். இந்தத் திட்டத்தில், உரிமை கோரும் உறுப்பினர் பணியாளரின் நாமினியாக இருக்க வேண்டும். அதாவது, நிறுவனத்தில் சேரும் போது நீங்கள் யாரை நாமினியாக நியமித்தீற்களோ, அவர் உங்கள் காப்பீட்டுப் பணத்தை கிளெயிம் செய்யலாம். 


என்னென்ன ஆவணங்கள் தேவை?


நீங்கள் பிஎஃப்- இன் கீழ் க்ளைம் செய்ய விரும்பினால், காப்பீட்டு நிறுவனத்திற்கு பணியாளரின் இறப்புச் சான்றிதழ், க்ளைம் செய்யும் நபரின் சான்றிதழ் மற்றும் வங்கி விவரங்கள் தேவைப்படும்.


இ-நாமினேஷன் வசதி


7 லட்சம் வரையிலான காப்பீட்டைப் பயன்படுத்திக் கொள்ள இ-நாமினேஷன் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, ஆன்லைனில் உறுப்பினர்கள் நாமினியை நியமிக்கலாம். ஏற்கனவே உருவாக்கப்பட்ட நாமினியின் தகவலையும் நீங்கள் புதுப்பிக்கலாம்.


எவ்வளவு தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்?


காப்பீட்டின் நன்மையைப் பெற நீங்கள் எந்தப் பணத்தையும் பிரீமியமாகத் தனியாகச் செலுத்த வேண்டியதில்லை. இந்தத் திட்டத்திற்கான பங்களிப்பு நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தால் செய்யப்படுகிறது.


மேலும் படிக்க | ஆதார் எண் இல்லாமல் ஆதார் கார்டை எப்படி டவுன்லோட் செய்வது 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ