EPFO செய்திகள்: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) அவ்வப்போது தனது ஊழியர்களுக்கு பல வித புதுப்பிப்புகளை வெளியிடுகின்றது. இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் செய்யப்பட்ட மாற்றங்களை முதலாளி / நிறுவனம் மூலம் சரிபார்க்க வேண்டியது (வேலிடேஷன்) அவசியம் என இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘EPF கணக்கு வைத்திருப்பவரின் கோரிக்கையும் முதலாளி / நிறுவனத்தின் லாக் இன் -இல் தெரியும். கூடுதலாக, ஒரு தானியங்கி மின்னஞ்சல் முதலாளி / நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பப்படும்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) உறுப்பினர்கள் தங்கள் விவரங்களை திருத்த அல்லது புதுப்பிக்க ஒரு புதிய நடைமுறையை வெளியிட்டுள்ளது. EPFO வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, EPF உறுப்பினர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் உள்ளிட்ட பல விவரங்களைச் சரிசெய்வதற்காக ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) வெளியிடப்பட்டுள்ளது. புதிய செயல்முறை EPF உறுப்பினர்கள் தங்கள் சுயவிவரங்களை புதுப்பிப்பதை எளிதாக்கும். இந்த நேரத்தில், உரிமைகோரல்களைச் செயலாக்கும்போது நிராகரிப்புகள் மற்றும் தரவு பொருந்தாததால் ஏற்படும் மோசடிகள் தவிர்க்கப்படும்.


எந்த விவரங்களைத் திருத்தலாம் அல்லது புதுப்பிக்கலாம்


EPFO சுற்றறிக்கையின்படி, 11 விவரங்கள் திருத்தப்படலாம் அல்லது புதுப்பிக்கப்படலாம்:
- பெயர்
- பாலினம்
- பிறந்த தேதி
- தந்தையின் பெயர்
- உறவு
- திருமண நிலை
- பணியில் சேர்ந்த தேதி
- பணியிலிருந்து விலக காரணம்
- தேசியம்
- ஆதார் எண்


EPF கணக்கில் மாற்றத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி


சுற்றறிக்கையின்படி, EPF கணக்கு வைத்திருப்பவர்கள் சுயவிவரங்களைச் சரிசெய்வதற்காக உறுப்பினர் சேவை போர்ட்டலில் தங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். இதனுடன், தேவையான ஆவணங்களும் உறுப்பினர் சேவை போர்ட்டலில் பதிவேற்றப்பட வேண்டும். இது எதிர்கால குறிப்புக்காக சேவையகத்தில் வைக்கப்படும்.


இதற்கிடையில், EPF உறுப்பினர் தனது கணக்கில் செய்யப்பட்ட மாற்றங்களை முதலாளியால் சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும். சுற்றறிக்கையின்படி, EPF கணக்கு வைத்திருப்பவரின் கோரிக்கை முதலாளி / நிறுவனத்தின் லாக் இன் -இலும் பிரதிபலிக்கும். கூடுதலாக, ஒரு தானியங்கி மின்னஞ்சல் முதலாளியின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பப்படும். EPF உறுப்பினர்கள் தற்போதைய முதலாளியால் பராமரிக்கப்படும் அந்த உறுப்பினர் கணக்குகளில் மட்டுமே தரவை சரிசெய்து பெற முடியும். மற்ற அல்லது முந்தைய நிறுவனங்களுக்கு சொந்தமான உறுப்பினர் கணக்குகளில் மாற்றங்களைச் செய்ய எந்த முதலாளிக்கும் அதிகாரம் இல்லை.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. ரயில்வே தந்த செம நியூஸ்


இந்த எளிய வழிமுறைகளின் உதவியுடன் விண்ணப்பிக்கவும்:


- ஸ்டெப் 1: உறுப்பினர் சேவைகள் போர்ட்டலுக்குச் சென்று உங்களின் உலகளாவிய கணக்கு எண் (UAN) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும். 


- ஸ்டெப் 2: லாக் இன் செய்த பிறகு, 'Joint Declaration (JD)' டேப்பில் கிளிக் செய்யவும். UIDAI உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்.


- ஸ்டெப் 3: OTP ஐ உள்ளிடவும், ஒரு கூட்டு அறிவிப்பு படிவம் திரையில் தோன்றும்.


- ஸ்டெப் 4: இந்தப் பட்டியலில் கேட்கப்பட்ட ஆவணங்களுடன் தேவையான விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.


EPF கணக்கு வைத்திருப்பவரால் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, முதலாளியும் அதைச் சரிபார்க்க வேண்டும். முதலாளி தனது பதிவுகளிலிருந்து தகவலைச் சரிபார்ப்பார். கூட்டு அறிவிப்பு விண்ணப்பம் புதுப்பிப்பதற்காக EFPO அலுவலகத்திற்கு அனுப்பப்படும். ஏதேனும் தகவல் விடுபட்டிருந்தால் விண்ணப்பம் EPF உறுப்பினருக்கு திருப்பி அனுப்பப்படும். இது EPF உறுப்பினரின் EPFO கணக்கில் தெரியும்.


விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்


பெயர் மற்றும் பாலினம் போன்ற விவரங்களை சரி செய்ய ஆதார் அவசியம். சிறிய புதுப்பிப்புக்கு, பாஸ்போர்ட், பான் கார்டு, வாக்காளர் அட்டை போன்ற மேலும் ஒரு ஆவணத்தை ஆதாருடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். EPF உறுப்பினர் இறந்துவிட்டால், பெயர் திருத்தத்திற்காக சட்டப்பூர்வ வாரிசுகள் சார்பாக இறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். பெரிய திருத்தத்திற்கு, ஆதாருடன் மேலும் இரண்டு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர, EPF கணக்கில் பிறந்த தேதியை சரி செய்ய, EPF உறுப்பினர், பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் மற்றும் ஆதார் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு ஜாக்பாட்: டி ஹைக்குடன் கூடுதல் நன்மைகள்.. உத்தரவு வெளியானது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ