PF உறுப்பினர்களுக்கு அப்டேட்: நிறுவனங்களுக்கான முக்கிய விதிகளை மாற்றியது EPFO
EPFO Update: EPFO மூலன் வெளியிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்கள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, அங்கீகார செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் இணக்கத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
EPFO Update: PF உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, சமீபத்தில் டிஜிட்டல் சிக்னேச்சர் சான்றிதழ்கள் (DSC) மற்றும் முதலாளிகள் / நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்படும் மின்-கையொப்ப கோரிக்கைகள் (E-Sign Requests) தொடர்பான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கான அப்டேட்
EPFO மூலன் வெளியிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்கள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, அங்கீகார செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் இணக்கத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
EPFO டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ்கள் (EPFO Digital Signature Certificates)
- மத்திய PF கமிஷனரின் முந்தைய சுற்றறிக்கைகளின் மூலம் DSC பயன்பாடு ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- EPFO இல் பதிவு செய்யப்படுவதற்கு, முதலாளி / நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவரிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு DSC தேவை என இந்த சுற்றறிக்கைகள் தெரிவிக்கின்றன.
- இப்போது, இ-கவர்னன்ஸ் முன்முயற்சியின் ஒரு பகுதியாக இ-சைன் அறிமுகப்படுத்தப்பட்டதால், பாதுகாப்பான அங்கீகாரம் இன்னும் முக்கியமானதாகிறது.
- தவறான பயன்பாடுகளின் சாத்தியமான சட்டரீதியான விளைவுகளை வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன.
- ஆகையால், முதலாளிகள் / நிறுவனங்கள் கோடிட்டுக் காட்டப்பட்ட நடைமுறைகளை உன்னிப்பாகப் பின்பற்றுவது அவசியமாகின்றது.
- இ-கவர்னன்ஸ் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, ஸ்தாபனம் தொடர்பான ஆவணங்களை அங்கீகரிப்பதற்காகவும், உரிமை தொடர்பான சட்டப்பூர்வ வருமானங்களைச் சமர்ப்பிப்பதற்காகவும் இ-சைனை பயன்படுத்த EPFO அனுமதிக்கிறது.
- இந்த நடவடிக்கை அனைத்து பங்குதாரர்கள் மீதும் DSC மற்றும் e-sgn தாக்கத்தை அங்கீகரிக்கிறது.
- மேலும், தவறாகப் பயன்படுத்தினால் முதலாளிகளுக்கு ஏற்படக்கூடும் சட்டரீதியான பிரச்சனைகள் குறித்தும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு VRS குறித்த முக்கிய அப்டேட்: மிஸ் பண்ணிடாதீங்க
நிறுவனங்களுக்கான வழிமுறைகள்
- இந்த அங்கீகார செயல்முறையை சீரமைத்து, சுமூகமான செயலாக்கத்தை எளிதாக்க, ஆன்லைன் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கும்போது, முதலாளிகள் / நிறுவனங்கள் குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- யூனிஃபைட் போர்ட்டல் மூலம் ஆன்லைன் கோரிக்கை கடிதத்தை முதலாளிகள் / நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
- இந்தக் கடிதத்தில் கையொப்பமிட விரும்பும் நபரின் மூன்று மாதிரி கையொப்பங்கள் இருக்க வேண்டும்.
- இந்தக் கோரிக்கைகளைச் செயல்படுத்த, உரிமையை விவரிக்கும் புதுப்பித்த படிவம் 5A இன்றியமையாததாகும்.
- கையொப்பமிட்டவரின் பெயர் மற்றும் மொபைல் எண்ணை இதில் சேர்க்கவும்.
- DSC/E-Sign கோரிக்கைக் கடிதம் நிறுவனத்தின் லெட்டர்ஹெட்டில் இருக்க வேண்டும்.
- இதில், முதலாளி கவுண்டர்சைன் செய்து ஸ்டாம்ப் செய்திருக்க வேண்டும்.
- கோரிக்கையுடன் ஆதார் அட்டை அல்லது UAN கார்ட் போன்ற செல்லுபடியாகும் அடையாளச் சான்றுகள் இருக்க வேண்டும்.
- நியமிக்கப்பட்ட ஆன்லைன் கருவிகளைப் பயன்படுத்தி சமர்ப்பிக்கப்பட்ட ஆதார் விவரங்களின் நம்பகத்தன்மையை கள அலுவலகங்கள் சரிபார்க்கும்.
- கோரிக்கைகளை 15 வேலை நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று EPFO கூறுகிறது.
DSC அல்லது E-Sign தவறாகப் பயன்படுத்தப்பட்டால், முதலாளி / நிறுவனம் மற்றும் அவர்களது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் இருவரும் கூட்டுப் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வார்கள். சட்டரீதியான விளைவுகளைத் தவிர்க்க இந்தப் புதிய வழிகாட்டுதல்களுடன் இணங்குவது மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ