EPFO Higher Pension: உயர் ஓய்வூதியத்திற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா?
EPFO Higher Pension: பிஎஃப் சந்தாதாரர்களுக்கு முக்கிய செய்தி!! உயர் ஓய்வூதியத்திற்கான காலக்கெடு நீட்டிக்கப்படலாம்.
பிஎஃப் சந்தாதாரர்களுக்கு முக்கிய செய்தி!! உயர் ஓய்வூதியத்திற்கான காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. தற்போதைய நிலவரப்படி, உயர் ஓய்வூதிய விருப்பத்தை தேர்வு செய்வதற்கான கூட்டு படிவத்தை சரிபார்க்க (வேலிடேட் செய்ய) கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும். இது நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. முன்னதாக, அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான அசல் காலக்கெடு மார்ச் 3 ஆக இருந்தது. இது இதுவரை 4 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 1996 இல், EPS-95 இன் பத்தி 11(3) இல் ஒரு விதி சேர்க்கப்பட்டது. இதில், EPFO உறுப்பினர்கள் தங்கள் ஓய்வூதிய பங்களிப்பை அவர்களின் முழு சம்பளத்தில் (அடிப்படை + அகவிலைப்படி) 8.33% அதிகரிக்க அனுமதிக்கப்பட்டனர். அதாவது அதிக ஓய்வூதியம் பெற அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதிக ஓய்வூதிய பங்களிப்பிற்கான கூட்டு விருப்ப படிவத்தை ( Joint Option Form ) தாக்கல் செய்ய ஊழியர்களுக்கு இபிஎஃப்ஓ (EPFO) ஆறு மாதங்கள் மட்டுமே அவகாசம் அளித்திருந்தது. இந்த காலகட்டத்தில் பல ஊழியர்களால் கூட்டு விருப்ப படிவத்தை தாக்கல் செய்ய முடியவில்லை. இதனால் இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும் என ஊழியர்களின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில், இந்த ஊழியர்களுக்கு கூட்டு விருப்ப படிவத்தை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
மேலும் படிக்க | அரிசி பொறி தயாரிப்பு: ₹3.5 லட்சம் முதலீட்டில் ₹90,000 சம்பாதிக்கலாம்!
காலக்கெடுவை நீட்டிக்க முதலாளிகள் கோரிக்கை:
பல முதலாளிகள் / நிறுவனங்கள் இப்போது கூட்டு விருப்பப் படிவத்தை சரிபார்க்க காலக்கெடுவை நீட்டிக்குமாறு தொழிலாளர் அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இபிஎஃப்ஓ இணையதளத்தில் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருப்பதாகவும், விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பு விவரங்களைப் பெறுவதிலும் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், இதன் காரணமாக கூட்டு விருப்பப் படிவத்தை விரைவாக தாக்கல் செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளனர். முதலாளி / நிறுவனங்களின் கோரிக்கையின் பேரில், படிவத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை அரசாங்கம் மீண்டும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கக்கூடும் என கூறப்படுகின்றது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நவம்பர் 2022 இல் வந்தது
முன்னதாக, உச்ச நீதிமன்றம் நவம்பர் 4, 2022 அன்று தனது உத்தரவில், தகுதியான அனைத்து உறுப்பினர்களுக்கும் உயர் ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்வுசெய்ய EPFO நான்கு மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறியது. இந்த நான்கு மாத காலம் மார்ச் 3, 2023 அன்று முடிவடைந்தது. அதன் பின்னர் இந்த காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்
ஒரு ஊழியர் பல ஆண்டுகள் வேலை பார்க்கும்போது, EPF கணக்கில் கணிசமான தொகை செர்கிறது. இது EPFO விதிகளின்படி ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ எடுக்கப்படலாம். இந்தத் தொகை ஊழியர்களுக்குத் தேவைப்படும் நேரங்களில், குறிப்பாக ஓய்வுக்குப் பிறகு பயனுள்ளதாக இருக்கும்.
மறுபுறம், இபிஎஸ் -இல் (EPS) டெபாசிட் செய்யப்பட்ட பணம் ஓய்வு காலத்திற்கான ஓய்வூதிய நிதியாக சேர்க்கப்படுகின்றது. பணிக்காலம் 10 ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்தால், இறுதி செட்டில்மெண்டின் போது இபிஎஸ் தொகையை மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம் (வித்ட்ரா செய்யலாம்).
EPF தொகை மற்றும் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு EPFO உறுப்பினர்கள் வெவ்வேறு படிவங்களை நிரப்ப வேண்டும். இந்தப் படிவங்களில் படிவம் 10C, படிவம் 10D, படிவம் 19 மற்றும் படிவம் 31 ஆகியவை அடங்கும். படிவம் 10D மற்றும் 10C ஆகியவை ஓய்வூதியப் பலன்களுக்கானவை. இறுதி செட்டில்மெண்டுக்கு (Final Settlement) படிவம் 19 தேவைப்படுகிறது. மேலும் ஒரு பகுதி தொகையை மட்டும் எடுப்பதற்கு (partial withdrawal) படிவம் 31 பயன்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | ஜாக்பாட் ஓய்வூதிய திட்டங்கள்: மாதா மாதம் கிடைக்கும் நிலையான சூப்பர் வருமானம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ