Higher Pension Update: நீங்களும் அதிக ஓய்வூதியம் பெற விரும்பினால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு சார்பில், அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்ய ஊழியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த விருப்பத்தை நீங்கள் இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், உங்களுக்கு இன்னும் 10 நாட்கள் உள்ளன. EPFO ஆனது சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு வேலை வழங்குனருடன் கூட்டு விருப்ப படிவத்தை நிரப்ப ஆன்லைன் வசதியை வழங்கியுள்ளது.  அதிக ஓய்வூதியம் குறித்து பல கேள்விகள் உள்ளன. கூடுதல் பங்களிப்பின் விருப்பம் எவ்வாறு செயல்படும் மற்றும் அதிக ஓய்வூதியத்தை நீங்கள் தேர்வு செய்தால் பணம் செலுத்தும் முறை என்னவாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதிக தொகையைக் கேட்டால், உயர் ஓய்வூதியத் திட்டத்திலிருந்து விலகுவதற்கான விருப்பம் கிடைக்குமா என்பது கூட உறுப்பினருக்கு இப்போது தெரியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரேஷன் கார்டில் இனி ஈஸியாக பெயர் சேர்க்கலாம்... ஆன்லைனிலும் ஆப்லைனிலும்!


அறிவிப்பில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்


கூடுதல் தொகையை மண்டல அலுவலர்கள் நிர்ணயம் செய்வார்கள் என சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோர்/உறுப்பினர்கள் பணத்தை டெபாசிட் செய்யவும், நிதி பரிமாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கவும் மூன்று மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  15,000 அடிப்படை சம்பள வரம்பில், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) மானியமாக 1.16 சதவீதத்தை அரசாங்கம் வழங்குகிறது. இபிஎஃப்ஓவின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் பணியாளர்கள் 12 சதவீதம் பங்களிக்கின்றனர். அதே நேரத்தில், முதலாளியின் 12 சதவீத பங்களிப்பில், 8.33 சதவீதம் இபிஎஸ்-க்கு செல்கிறது. மீதமுள்ள 3.67 சதவீதம் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு செல்கிறது.


மேலும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் 18 மாதங்களாக நிலுவையில் உள்ள டிஏ நிலுவைத் தொகை கிடைக்கும் என்றும், இதனால் சுமார் ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் நம்பப்படுகிறது.  இது தவிர, அகவிலைப்படியிலும் ஜூலை மாதம் நல்ல அதிகரிப்பு இருக்கும் என அரசாங்கம் அறிவிக்கக்கூடும். இவை இரண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். அரசாங்கம் இந்த பெரிய அறிவிப்பை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால், இது குறித்த பல ஊடக அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. அகவிலைப்படி அதிகரிப்புக்கு பிறகு, ஊழியர்களின் ஊதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும் என்று கருதப்படுகிறது.


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் 18 மாத டிஏ நிலுவைத் தொகை வழங்கப்படக்கூடும். எனினும் இது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த தெளிவான அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், எப்போது வேண்டுமானாலும் இது அறிவிக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் இந்த ஆண்டு ஊழியர்களை பொறுத்தவரை மிக நல்ல ஆண்டாக இருக்கும். இதன்படி, முதல் நிலை ஊழியர்களின் கணக்கில் சுமார் ரூ. 2 லட்சத்து 18 ஆயிரம் தொகை வரும். அதற்கான விவாதம் வேகமாகமும் மும்முரமாகவும் நடந்து வருகிறது.


மேலும் படிக்க | ரயில் பயணிகள் கவனத்திற்கு! மேலும் 5 புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ