EPS Pension Withdrawal: இந்த படிவங்களின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளுங்கள்
EPFO Forms: ஒரு ஊழியர் பல ஆண்டுகள் வேலை பார்க்கும்போது, EPF கணக்கில் கணிசமான தொகை செர்கிறது. இது EPFO விதிகளின்படி ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ எடுக்கப்படலாம்.
EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை (EPS) நிர்வகிக்கிறது. இது தனியார் துறையில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. EPFO விதிகளின்படி, ஒவ்வொரு மாதமும், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் மற்றும் அகவிலைப்படி (DA) ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. முதலாளியும் / நிர்வாகமும் EPF -க்கு அதே அளவு தொகையை வழங்குகிறார்கள். முதலாளி / நிர்வாகத்தின் பங்களிப்பிலிருந்து, 8.33 சதவீதம் இபிஎஸ் கணக்கிற்கும், மீதமுள்ள 3.67 சதவீதம் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.
ஒரு ஊழியர் பல ஆண்டுகள் வேலை பார்க்கும்போது, EPF கணக்கில் கணிசமான தொகை செர்கிறது. இது EPFO விதிகளின்படி ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ எடுக்கப்படலாம். இந்தத் தொகை ஊழியர்களுக்குத் தேவைப்படும் நேரங்களில், குறிப்பாக ஓய்வுக்குப் பிறகு பயனுள்ளதாக இருக்கும்.
மறுபுறம், இபிஎஸ் -இல் (EPS) டெபாசிட் செய்யப்பட்ட பணம் ஓய்வு காலத்திற்கான ஓய்வூதிய நிதியாக சேர்க்கப்படுகின்றது. பணிக்காலம் 10 ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்தால், இறுதி செட்டில்மெண்டின் போது இபிஎஸ் தொகையை மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம் (வித்ட்ரா செய்யலாம்).
இருப்பினும், சேவை காலம் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருந்தால், இந்த பணம் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியமாக பெறப்படுகிறது.
EPF தொகை மற்றும் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு EPFO உறுப்பினர்கள் வெவ்வேறு படிவங்களை நிரப்ப வேண்டும். இந்தப் படிவங்களில் படிவம் 10C, படிவம் 10D, படிவம் 19 மற்றும் படிவம் 31 ஆகியவை அடங்கும். படிவம் 10D மற்றும் 10C ஆகியவை ஓய்வூதியப் பலன்களுக்கானவை. இறுதி செட்டில்மெண்டுக்கு (Final Settlement) படிவம் 19 தேவைப்படுகிறது. மேலும் ஒரு பகுதி தொகையை மட்டும் எடுப்பதற்கு (partial withdrawal) படிவம் 31 பயன்படுத்தப்படுகிறது.
EPFO Form 10C
ஒரு EPFO உறுப்பினர் முழு ஓய்வூதியத் தொகையையும் பெற முழு மற்றும் இறுதி தீர்வு (full and final settlement ) நேரத்தில் படிவம் 10C ஐ (Form 10C) சமர்ப்பிக்க வேண்டும். பணிக்காலம் 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் இந்தப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவத்தை ஓய்வூதிய திட்ட சான்றிதழைப் (pension scheme certificate) பெறவும் பயன்படுத்தலாம். இது ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு பிஎஃப் இருப்பை மாற்ற அனுமதிக்கிறது.
EPFO Form 10D
EPFO விதிகளின்படி, ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) பங்களித்திருந்தால், ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியப் பலன்களைப் பெற, 10D படிவத்தை (Form 10D ) நிரப்ப வேண்டும். மேலும், ஒரு நபர் EPS ஓய்வூதிய வருமானத்திற்கு தகுதியுடைய பிற சூழ்நிலைகளில், அவர் படிவம் 10D ஐயும் (Form 10D) பூர்த்தி செய்ய வேண்டும்.
இபிஎஃப்ஓ என்றால் என்ன?
ஓய்வூதியத்திற்கான திட்டமிடல் மற்றும் நிதி பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அம்சமாகும். இந்தியாவில் ஓய்வூதியத்திற்காக சேமிப்பதில் முக்கிய வழிகளில் ஒன்று "பணியாளர் வருங்கால வைப்பு நிதி' (EPF) ஆகும். அரசாங்கச் சேமிப்புத் திட்டமான இது, ஊழியர்கள் தங்கள் பணி ஆண்டுகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தவும், வசதியான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் ஓய்வூதிய திட்டங்களை நிர்வகிக்கிறது. இபிஎஃப்ஓ அவ்வப்போது பல வித புதுப்பிப்புகளை தனது சந்தாதாரர்களுக்கு வழங்குகிறது.
உங்களின் EPF கணக்கு இருப்பை பற்றிய முக்கியத்துவத்தை உணர்ந்து, EPFO (பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) பணியாளர்கள் தங்கள் EPF இருப்பை ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் சரிபார்க்க பல வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: புதிய வதி விரைவில்.. கணக்கில் வரும் அதிக தொகை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ