EPS திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?
உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின்படி, அதிக ஓய்வூதியத்தை பெற விரும்புபவர்கள் வரும் மார்ச் 3, 2023 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 20, 2023 அன்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கான வழிகாட்டுதல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. ஊழியர் மற்றும் முதலாளி இருவரிடமிருந்தும் கூட்டு விண்ணப்பங்களை பெற ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அனுமதி வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின்படி, அதிக ஓய்வூதியத்தை பெற விரும்புபவர்கள் வரும் மார்ச் 3, 2023 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று இபிஎஸ்-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள வரம்பு மாதம் ரூ.6,500லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. கூடுதலாக, ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் தங்கள் உண்மையான சம்பளத்தில் 8.33 சதவீதத்தை இபிஎஸ்-க்கு பங்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் படிக்க | கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? ஒருவருக்கு கிரெடிட் ஸ்கோர் ஏன் முக்கியம்?
கள அலுவலகங்கள் மூலம் கூட்டு விருப்ப படிவத்தை அலுவலகங்கள் கையாள்வது குறித்த விவரங்களை இபிஎஃப்ஓ அளித்துள்ளது, இபிஎஃப்ஓ இதற்கான வசதியை விரைவில் செய்து தரவுள்ளது. ஒவ்வொரு விண்ணப்பமும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு அதற்கு ரசீது எண் வழங்கப்படும். வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் பொறுப்பதிகாரி அதிக ஊதியத்தில் கூட்டு விருப்பத்தின் ஒவ்வொரு வழக்கையும் ஆய்வு செய்வார். இந்த ஆய்வின் முடிவுகள் விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல், அஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக அறிவிக்கப்படும்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை தொடர்ந்து ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதியன்று ஒரு சுற்றறிக்கையினை வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அதிக ஊதியம் அளித்து, ஓய்வு பெறுவதற்கு முன் அதிக ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுத்த ஊழியர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு திருத்தத்தின்படி, இந்த விருப்பத்தை பயன்படுத்திய ஊழியர்கள் மட்டுமே இபிஎஃப்ஓ வழங்கும் நன்மையை பயன்படுத்த தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ