PF உறுப்பினர்கள் பலர் அறியாத முக்கிய விதி: இப்படி செய்தால் ரூ. 50,000 கூடுதல் நன்மை கிடைக்கும்
EPFO Rules: இபிஎஃப் -இல் பல ஓய்வூதிய பலன்கள் உள்ளன. மேலும் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இதற்கான வட்டியும் கிடைக்கின்றது.
EPFO Rules: மாதா மாதம் பிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி காத்திருக்கிறது. ஊழியர்கள் மாதா மாதம் பிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. இந்த இபிஎஃப் தொகை பணி ஓய்வுக்கு பிறகான ஒரு முக்கியமான நிதி பாதுகாப்பாக பார்க்கப்படுகின்றது.
ஒரு ஊழியர் நிறுவனத்தை மாற்றும்போது பிஎஃப் தொகையை புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டுமானாலும், அல்லது தொகையை எடுக்க வேண்டுமானாலும், இவற்றுக்கான எளிய விதிகளை பின்பற்றி அதை செய்யலாம். இபிஎஃப் -இல் பல ஓய்வூதிய பலன்களும் உள்ளன. மேலும் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) இதற்கான வட்டியும் கிடைக்கின்றது.
எனினும் இன்னும் சில இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) இதன் சில விதிகள் பற்றி தெரியாத நிலை உள்ளது. அதில் உறுப்பினர்களுக்கு அதிக நன்மை அளிக்கக்கூடிய ஒரு விதியை பற்றி இங்கே காணலாம். இந்த விதி லாயல்டி-கம்-லைஃப் (Loyalty-cum-Life) நன்மையுடன் தொடர்புடையது. இதில், ஊழியர் ரூ. 50,000 வரை நேரடி பலன்களைப் பெறுகிறார். ஆனால், இந்த பலனை பெற இதற்கான இருக்கும் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.
இந்த பலனை எப்போது பெற முடியும்?
வேலை மாறிய பிறகும் ஒரே EPF கணக்கில் தொடர்ந்து பங்களிக்க அனைத்து பிஎஃப் உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம், 20 வருடங்கள் தொடர்ந்து ஒரே கணக்கில் பங்களித்த பிறகு, லாயல்டி-கம்-லைஃப் பலன்களைப் பெறலாம்.
இந்த திட்டத்தின் பலனை எவ்வாறு பெறுவது?
20 ஆண்டுகளாக தங்கள் EPF கணக்கில் தொடர்ந்து பங்களிக்கும் பிஎஃப் உறுப்பினர்களுக்கு லாயல்டி-கம்-லைஃப் நன்மையின் பலனை வழங்க CBDT பரிந்துரைத்தது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது 20 ஆண்டுகளாக தொடர்ந்து பங்களிக்கும் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு ரூ. 50,000 கூடுதல் பலன் கிடைக்கும்.
மேலும் படிக்க | மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஏன் சிறந்த முதலீட்டுத் திட்டமாக இருக்கிறது?
எந்த பிஎஃப் உறுப்பினர்களுக்கு பலன் கிடைக்கும்?
லாயல்டி-கம்-லைஃப் நன்மையின் கீழ்,
- ரூ. 5,000 வரை அடிப்படை சம்பளம் உள்ளவர்கள் ரூ.30,000 பலனைப் பெறுகிறார்கள்.
- ரூ.5,001 முதல் ரூ.10,000 வரை அடிப்படை சம்பளம் உள்ளவர்களுக்கு ரூ.40,000 கிடைக்கும்.
- அடிப்படை சம்பளம் ரூ.10,000க்கு மேல் இருந்தால், ரூ.50,000 பலன் கிடைக்கும்.
பிஎஃப் உறுப்பினர்கள் இந்த நன்மையை பெற என்ன செய்ய வேண்டும்?
EPFO சந்தாதாரர்கள் இந்தப் பலனைப் பெறுவதற்கான சிறந்த வழி, வேலையை மாற்றினாலும் ஒரே EPF கணக்கைத் தொடர்வதாகும். இதை செய்ய ஊழியர்கள் தங்கள் பழைய நிறுவனம் மற்றும் புதிய நிறுவனம் என இரு தரப்பிற்கும் தகவல் கொடுக்க வேண்டும். பொதுவாக, ஓய்வுக்கு முன்னர், பணி காலத்தில், PF பணத்தை பாதியிலேயே எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அப்படி எடுத்தால், சந்தாதாரர்களுக்கு வருமான வரி உட்பட தங்கள் ஓய்வூதிய நிதியிலும் இழப்பை சந்திக்க நேரிடும். மேலும் இதன் காரணமாக, உறுப்பினர்கள் லாயல்டி-கம்-லைஃப் -இன் நன்மைகளையும் இழக்க நேரிடும்.
மேலும் படிக்க | வரிச்சலுகைகளுடன் பென்ஷனும் குறையாமல் கிடைக்க.. இளமையிலேயே NPS முதலீடு அவசியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ