EPFO விதிகளில் மாற்றம்: நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்
PF Rule Change: இபிஎஃப்-க்கான பங்களிப்புக்காக முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகைகளில் அரசாங்கம் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. ஏப்ரல் 1, 2022 முதல், வருங்கால வைப்பு நிதி கணக்குகள் வரி விதிக்கக்கூடிய மற்றும் வரி விதிக்கப்படாத கணக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) மில்லியன் கணக்கான ஊழியர்களின் மிக முக்கியமான நிதி திட்டமிடல் மற்றும் ஓய்வூதிய முதலீட்டுத் தேர்வுகளில் ஒன்றாகும். உறுதியளிக்கப்பட்ட வருமானம் மற்றும் வரிச் சலுகைகளுடன், இபிஎஃப் பெரும்பாலானவர்களுக்கு உகந்த முதலீட்டுத் திட்டமாக உள்ளது. EEE திட்டத்தின் கீழ், ஃபண்டுக்கு அளிக்கப்பட்ட பங்களிப்புகள் மற்றும் சேமிப்புத் தொகையிலிருந்து எடுக்கப்படும் தொகை ஆகியவற்றிற்கும் வரி விலக்குகள் கிடைக்கும். இபிஎஃப்ஓ அவ்வப்போது பல புதுப்பிப்புகளை கொண்டு வருகிறது.
இபிஎஃப்-க்கான பங்களிப்புக்காக முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகைகளில் அரசாங்கம் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. ஏப்ரல் 1, 2022 முதல், வருங்கால வைப்பு நிதி கணக்குகள் வரி விதிக்கக்கூடிய மற்றும் வரி விதிக்கப்படாத கணக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட் 2021 இன் கீழ், EEE திட்டத்தில் இருந்து பயனடையும் அதிக வருமானம் ஈட்டுபவர்களை இலக்காகக் கொண்டு வரிச் சலுகைகளை குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இபிஎஃப்-ல் பங்களிக்கும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- 2021-22 நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை நான்கு தசாப்தங்களில் இல்லாத குறைவான அளவில், 8.1 சதவீதமாக இபிஎஃப்ஓ குறைத்துள்ளது.
- ஒரு பணியாளரின் இபிஎஃப்-க்கு செலுத்தப்படும் பங்களிப்புகள் மீதான எந்தவொரு வட்டியும் ஒரு வருடத்திற்கு ₹ 2.5 லட்சம் வரையிலான பங்களிப்புகளுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
- ரூ.2.5 லட்சத்துக்கும் மேலான பங்களிப்புகளுக்கான வட்டிக்கு ஊழியரிடமிருந்து ஆண்டு வாரியாக வரி விதிக்கப்படுகிறது.
- ஒரு பணியாளரின் இபிஎஃப்-க்கு ஒரு முதலாளி பங்களிக்கவில்லை என்றால் பங்களிப்பு வரம்பு ரூ. 5 லட்சமாக அதிகரிக்கப்படும்.
- வரம்பிற்கு மேல் உள்ள அதிகப்படியான பங்களிப்புக்கு மட்டுமே வரி விதிக்கப்படும், மொத்த பங்களிப்புக்கு அல்ல.
- அதிகப்படியான பங்களிப்புகள் மற்றும் அதில் சேரும் வட்டி ஆகியவை இபிஎஃப்ஓ-ல் ஒரு தனி கணக்கில் பராமரிக்கப்படும்.
- வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்), என்பிஎஸ் மற்றும் ஓய்வு ஊதியம் ஆகியவற்றுக்கான முதலாளியின் பங்களிப்பு, ஆண்டுக்கு மொத்தம் ₹ 7.5 லட்சம் வரை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- வருமானத்தின் அடிப்படையில் முதலாளிகள் வரிகளை நிறுத்தி வைப்பதால், இந்த விவரங்கள் படிவம் 16 மற்றும் படிவம் 12BA இல் நிரப்பப்பட வேண்டும்.
- மாத வருமானம் ₹ 15,000 வரை உள்ள ஊழியர்களுக்கு இபிஎஃப் பங்களிப்புகளை முதலாளிகள் கட்டாயமாக வழங்க வேண்டும்.
- இவ்வாறு நிறுத்தி வைக்கப்படும் வரிகள் "பிற ஆதாரங்களில் இருந்து வரும் வருமானம்" என ஊழியர்களால் தெரிவிக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க | EPFO Alert: இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள், எச்சரிக்கும் இபிஎஃப்ஒ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ