EPFO Update: மனித உடலை பற்றி நாம் எதையும் கணிக்க முடியாது. யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மருத்துவ அவசரநிலை ஏற்படக்கூடும். நமக்கு ஏற்படும் நோயின் நிலை மற்றும் தீவிரத்தன்மையைப் பொறுத்து இவற்றின் சிகிச்சைக்காக எவ்வளவு செலாவாகும் என்பது தெரியவரும். இதுபோன்ற சமயங்களில் காப்பீட்டுத் தொகையும் பல நேரங்களில் குறைகிறது. எனினும், மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் (EPF Account) பணத்தை செபாசிட் செய்யும் பணியாளர்கள் இதுபோன்ற சூழ்நிலைகளில் உதவி பெறலாம். EPFO உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியிலிருந்து குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பகுதியளவு திரும்பப் பெறும் வசதியைப் பெறுகின்றனர். நோய் சிகிச்சைக்காக EPF -இல் இருந்து எவ்வளவு தொகையை எடுக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நோய் சிகிச்சைக்காக எவ்வளவு தொகையை எடுக்க முடியும்? 


உங்கள் சொந்த சிகிச்சைக்காகவோ அல்லது உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் மற்றும் பெற்றோர் என இவர்களின் நோய்க்கான சிகிச்சைக்காகவோ EPFO ​​இலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், அதை செய்ய முடியும். அதைப் பெறுவதற்கு லாக்-இன் காலம் இல்லை. இதற்கு குறைந்தபட்ச சேவைக் காலமும் எதுவும் இல்லை. நோய் சிகிச்சைகளுக்காக, EPFO ​​உறுப்பினர்கள் வட்டியுடன், இபிஎஃப் பங்களிப்பு தொகையில் ஆறு மடங்கு, அல்லது, மாத சம்பளத்தின் ஆறு மடங்கு, இரண்டில் எது குறைவாக உள்ளதோ அந்த தொகையை பெற முடியும். 


இந்த சூழ்நிலைகளிலும் பகுதி அளவு தொகையை எடுக்கலாம்


- உங்கள் சகோதரி, மகள், மகன் அல்லது குடும்ப உறுப்பினர்களின் திருமணம் செலவுக்கு இபிஎஃப் தொகையை எடுக்கலாம்.
- உங்கள் சொந்த அல்லது குழந்தைகளின் கல்விக்காக EPF இலிருந்து பகுதியளவு தொகையை எடுக்கலாம். 


இரண்டு சந்தர்ப்பங்களிலும் இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) 7 ஆண்டுகள் வேலை செய்திருக்க வேண்டியது அவசியம். 7 வருட சேவைக்குப் பிறகு, உங்கள் பங்களிப்பில் 50 சதவீதம் வரை வட்டியுடன் எடுக்கலாம். 


மேலும் படிக்க | மளிகை முதல் காய்கறி வரை சந்தையில் களமிறங்கும் ரிலையன்ஸ் 30 நிமிடத்தில் டெலிவரி!


- 5 வருடங்கள் EPF க்கு தொடர்ந்து பங்களிப்பு செய்த இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers), வீட்டை புதுப்பிப்பதற்காகவும் பணத்தை எடுக்கலாம். இந்தத் தொகை மாதச் சம்பளத்தை விட 12 மடங்கு அதிகமாக இருக்கலாம். ஆனால் இதற்கு வீடு EPFO ​​உறுப்பினரின் பெயரில் அல்லது கணவன் / மனைவியுடன் கூட்டாக இருக்க வேண்டும். 


- ஊழியர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சேவை செய்திருந்தால், அவர் வீட்டுக் கடனை செலுத்துவதற்கான தொகையை எடுக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், அவர் பிஎஃப் இருப்பில் 90% வரை பணத்தை எடுக்கலாம். 


- நீங்கள் ஒரு ப்ளாட் அல்லது வீடு வாங்குவதற்கு PF இலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், மாதச் சம்பளத்தின் 24 மடங்கு வரையிலும், வீடு வாங்குதல் மற்றும் கட்டுதல் ஆகிய இரண்டிற்கும், மாதச் சம்பளத்தின் 36 மடங்கு வரையிலும் எடுக்கலாம்.


- நிறுவனம் 15 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருந்தால், PF உறுப்பினர்கள்  தங்கள் முழுப் பங்களிப்பையும் எந்த நேரத்திலும் திரும்பப் பெறலாம். 


- பணியாளர் தனது வேலையை இழந்திருந்தால் அல்லது அதை விட்டு விலகியிருந்தால், ஒரு மாதத்திற்கு பிறகுதான் பணத்தை எடுக்க முடியும். இதில் அவர் 75 சதவிகிதம் வரை பணத்தை எடுக்கலாம். 


- பணியாளர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால், முழு PF தொகையையும் திரும்பப் பெறலாம்.


- புதிய வேலைவாய்ப்பைப் பெறும்போது நிலுவைத் தொகை உங்கள் புதிய EPF கணக்கிற்கு மாற்றப்படும். 


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ