ஊழியர் ஓய்வூதியத் திட்டம்: பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) முதலீட்டின் உச்சவரம்பு விரைவில் நீக்கப்படும். இது தொடர்பான விசாரணை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், இதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? இது உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும்? என்ற கெள்விகள் உங்களுக்குள் எழக்கூடும். இது ஊழியர்கள் அனைவருக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். அது என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இபிஎஸ் வரம்பை நீக்குவது என்றால் என்ன?


தற்போது, ​​ஓய்வூதியத்துக்கான அதிகபட்ச சம்பளம் மாதம் 15,000 ரூபாய் மட்டுமே. அதாவது, உங்கள் சம்பளம் என்னவாக இருந்தாலும், ஓய்வூதியத்தின் கணக்கீடு ரூ.15,000 இல் மட்டுமே செய்யப்படும். இந்த வரம்பை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.


ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கான வரம்பை 15,000 ரூபாயாக வரையறுக்க முடியாது என்று இந்திய யூனியன் மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தாக்கல் செய்த ஒரு தொகுதி மனுக்களின் விசாரணையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


இப்போது இபிஎஸ் தொடர்பான விதிகள் என்ன?


நாம் வேலை செய்யத் தொடங்கி இபிஎஃப்-ல் உறுப்பினராகும்போது, ​​அதே நேரத்தில் இபிஎஸ்-லும் உறுப்பினராகிறோம். ஊழியர் தனது சம்பளத்தில் 12% இபிஎஎஃப் இல் கொடுக்கிறார். அதே தொகையை அவரது நிறுவனமும் கொடுக்கிறது. ஆனால் இந்த 8.33 சதவிகிதத்தில் ஒரு பகுதி இபிஎஸ்- க்கும் செல்கிறது. நாம் மேலே குறிப்பிட்டுள்ளபடி, தற்போது அதிகபட்ச ஓய்வூதிய சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அதாவது ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய பங்கு அதிகபட்சம் (15,000 இல் 8.33%) ரூ 1250 ஆக இருக்கும்.


மேலும் படிக்க | EPFO Latest Update: விரைவில் நல்ல செய்தி, கணக்கில் வரும் பம்பர் தொகை


ஊழியர் ஓய்வு பெற்றாலும், ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான அதிகபட்ச சம்பளம் ரூ.15 ஆயிரமாக மட்டுமே கருதப்படுகிறது. இதன்படி, இபிஎஸ்-ன் கீழ் ஒரு ஊழியர் பெறக்கூடிய அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆகும்.


இப்படித்தான் ஓய்வூதியம் கணக்கிடப்படுகிறது


நீங்கள் செப்டம்பர் 1, 2014 க்கு முன் இபிஎஸ்- க்கு பங்களிக்கத் தொடங்கியிருந்தால், உங்களுக்கான ஓய்வூதியப் பங்களிப்புக்கான அதிகபட்ச மாதச் சம்பள வரம்பு ரூ.6500 ஆக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். செப்டம்பர் 1, 2014க்குப் பிறகு நீங்கள் இபிஎஸ்- இல் சேர்ந்திருந்தால், அதிகபட்ச சம்பள வரம்பு 15,000 ஆக இருக்கும். இப்போது ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பார்க்கலாம். 


இபிஎஸ் கணக்கீட்டு சூத்திரம்


- மாதாந்திர ஓய்வூதியம் = (ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் x இபிஎஸ் பங்களிப்பு அளிக்கப்பட்ட ஆண்டுகள்)/70


- இங்கே, ஊழியர் செப்டம்பர் 1, 2014க்குப் பிறகு இபிஎஸ்- க்கு பங்களிப்பு செய்யத் தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்.


- அப்படி இருந்தால், ஓய்வூதிய பங்களிப்பு ரூ.15,000 ஆக இருக்கும். 


- அவர் 30 ஆண்டுகள் பணிபுரிந்தார் என்று வைத்துக்கொள்வோம்.


- மாதாந்திர ஓய்வூதியம் = 15,000X30/70 = ரூ 6428


அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம்


இன்னும் ஒரு விஷயம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், பணியாளரின் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவை 1 வருடமாக கருதப்படும். அது குறைவாக இருந்தால் அது கணக்கிடப்படாது. அதாவது, பணியாளர் 14 ஆண்டுகள் 7 மாதங்கள் பணிபுரிந்திருந்தால், அது 15 ஆண்டுகளாகக் கருதப்படும். ஆனால் நீங்கள் 14 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் பணிபுரிந்திருந்தால், 14 வருட சேவை மட்டுமே கணக்கிடப்படும். இபிஎஸ்- இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை மாதம் 1000 ரூபாய், அதிகபட்ச ஓய்வூதியம் 7500 ரூபாய் ஆகும்.


ரூ. 8,571 ஓய்வூதியம் கிடைக்கும்


15 ஆயிரம் என்ற வரம்பு நீக்கப்பட்டு, அடிப்படைச் சம்பளம் 20 ஆயிரம் ரூபாயாக இருந்தால், பார்முலாவின்படி உங்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியம் இப்படித்தான் இருக்கும். 
- (20,000 X 30)/70 = ரூ 8,571.


ஓய்வூதியத்திற்கான (இபிஎஸ்) தற்போதைய நிபந்தனைகள்


- ஓய்வூதியத்திற்கு இபிஎஃப் உறுப்பினராக இருப்பது அவசியம்.


- குறைந்தபட்சம் 10 வருடங்கள் வழக்கமான பணியில் இருப்பது கட்டாயமாகும்.


- ஊழியருக்கு 58 வயதாகும்போது ஓய்வூதியம் கிடைக்கும்.


- 50 ஆண்டுகளுக்குப் பிறகும், 58 வயதுக்கு முன்பே ஓய்வூதியம் பெற வசதி உள்ளது.


- முதல் ஓய்வூதியத்தைப் பெறும்போது, ​​குறைக்கப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள், இதற்காக நீங்கள் படிவம் 10டியை நிரப்ப வேண்டும்.


- ஊழியர் இறந்தால், குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடைக்கும்.


- சேவை வரலாறு 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், அவர்கள் 58 வயதில் ஓய்வூதியத் தொகையை திரும்பப் பெறுவதற்கான வசதி கிடைக்கும்.


மேலும் படிக்க | ATM vs Debit Cards: இரண்டு கார்டுகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ