கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், மக்கள் வீட்டிற்குள் இருக்கவே விரும்புகிறார்கள். அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ள போதிலும், மக்கள் வீட்டை விட்டு அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியேறுகிறார்கள். பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள்  இருப்பதையே விரும்புகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Also Read | NASA வெளியிட்டுள்ள செவ்வாய் கிரக படத்தில் காணப்படும் வேற்று கிரக போர்வீரர்…!!!


இந்நிலையில், மக்கள் மத்தியில் இணையதள பயன்பாடு மிகவும்  அதிகரித்துள்ளது. இதனால் smartphone உபயோகப்படுத்துபவர்களுக்கான அதிரடி ஆஃபரை Vodafone Idea கொண்டு வந்துள்ளது. சில குறிப்பிட்ட prepaid ப்ளான்களில் கூடுதலாக 5GB data இலவசமாக வழங்கப்படுகிறது. ரூ.149, ரூ.219, ரூ.249, ரூ.399 and ரூ.599 என்ற கட்டணத்துடன் உள்ள  prepaid ப்ளான்களில் இந்த சலுகை வழங்கப்படுகிறது. ஆனால், இந்த சலுகை, வோடஃபோன் மற்றும் ஐடியாவின் அதிகாரபூர்வ ஆப்களின் மூலம் செய்யப்படும் ரீசார்ஜ்களுக்கு மட்டுமே பொருந்தும்.


இந்த ப்ளான்கள் குறித்த விபரங்கள்  வோடஃபோன் மற்றும் ஐடியாவின் வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.


ரூ.149 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டத்தில், 2GB data உடன் கூடுதலாக 1GB data வழங்கப்படுகிறது.  மேலும் இதில் அன்லிமிடெட் அழைப்புகள், வோடஃபோன் ப்ளே சப்ஸ்கிரிப்ஷன், Zee5 சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை உள்ளன. இது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.


ரூ.219 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டத்தில், 1GB data உடன் கூடுதலாக 2GB data வழங்கப்படுகிறது.  கூடுதல் 2GB data-வை 28 நாட்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இதில் அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 SMS, வோடஃபோன் ப்ளே சப்ஸ்கிரிப்ஷன், Zee5 சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை உள்ளன.


Also Read | Google Android டெவலப்பர் சேலஞ்ச்சில் வெற்றி பெற்ற 3 இந்தியர்கள்


ரூ.249 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டத்தில், 1.5GB data உடன் கூடுதலாக 5GB data வழங்கப்படுகிறது.  மேலும் இதில் அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 SMS, வோடஃபோன் ப்ளே சப்ஸ்கிரிப்ஷன், Zee5 சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை உள்ளன. இது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.


ரூ.399 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டத்திலும், அவை அனைத்தும் உள்ளன. ஆனால், அது 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.


அதே போன்று, ரூ.599 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டத்திலும், அவை அனைத்தும் உள்ளன. ஆனால், அது 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.


கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வீட்டில் இருக்க விரும்பும் மக்களின் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளால், இது பல மக்களுக்கு பலனளிக்கும்.


மொழியாக்கம்: வித்யா கோபாலகிருஷ்ணன்