புதுடெல்லி: பணமோசடி தடுப்பு விதிகளை மீறியதற்காக Paytm Payments வங்கிக்கு நிதி புலனாய்வு பிரிவு (FIU-IND) ரூ. 5.49 கோடி அபராதம் விதித்துள்ளதாக நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

FIU-IND ஆனது, சில நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் போன்ற பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ள வணிகங்களின் நெட்வொர்க் பற்றிய சட்ட அமலாக்கத் துறை ஏஜென்சிகளிடம் இருந்து கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில் Paytm Payments வங்கி மீதான மதிப்பாய்வு தொடங்கப்பட்டது.  


இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து பேடிஎம் வங்கி சம்பாதித்த பணம், அதாவது குற்றத்தின் வருமானம், Paytm Payments Bank Ltd-ல் இந்த நிறுவனங்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு டெபாசிட் செய்யப்பட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


“நிதி நுண்ணறிவு பிரிவு-இந்தியா (FIU-IND),PMLA (பணமோசடி தடுப்புச் சட்டம்) கீழ் அதன் கடமைகளை மீறியதற்காக Paytm Payments Bank Ltdக்கு ரூ. 5.49 கோடி பண அபராதம் விதித்துள்ளது,” என்று அமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Jackpot! இந்த ‘2’ ரூபாய் நோட்டு இருந்தா லட்சங்களில் பணத்தை அள்ளலாம்..!!


பிப்ரவரி 15 அன்று அபராதம் விதித்த நிதியமைச்சகம், அது தொடர்பானஉத்தரவை வெளியிட்டது. பிப்ரவரி 29 முதல் Paytm Payments வங்கி தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் புதிய வைப்பு அல்லது வரவுகளை எடுக்க தடையும் நேற்று முதல் அமலுக்கு வந்தது. RBI இன் ஜனவரி 31 உத்தரவுக்குப் பிறகு FIU நடவடிக்கை எடுத்த நிலையில், இந்தக் காலக்கெடு மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டது. 


உலகின் முன்னணி முதலீட்டாளரான வாரன் பஃபெட் (Warren Buffett) நிறுவனத்தை விட்டு வெளியேறியது உட்பட பல பிரச்சனைகளை Paytm Payments சந்தித்து வருகிறது. முதலீட்டாளர்களின் உணர்வுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், Paytm பங்குகள் பங்குச்சந்தையில் பெரும் சரிவை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | மார்ச் மாதம் 18 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. தேதி வாரியாக விவரம் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ