Fixed Deposit New Rules: ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்துள்ள நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். எஃப்டி டெபாசிட்கள் தொடர்பான முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. NBFC எனப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கான FD தொடர்பான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

NBFC, Housing Finance Companies: FD விதிகளில் மாற்றம்


இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India), சில முக்கிய விதிகளில் மாற்றங்களை செய்துள்ளது. இந்த புதிய விதிகள் ஜனவரி 2025 முதல் அமலுக்கு வரக்கூடும் என தெரிகிறது. இந்த விதி மாற்றம் குறித்து வாடிக்கையாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்.


RBI வெளியிட்ட வழிகாட்டுதல்கள்


இந்திய ரிசர்வ் வங்கி இது தொடர்பான சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சிறிய வைப்புத்தொகை, விதட்ராயல், பாஸ்புக் மற்றும் NBFC களுக்கான முதிர்வு தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றைப் பின்பற்றுவது கட்டாயமாக இருக்கும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கும். தேவைப்படும் நேரத்தில் பணம் எடுப்பதில் எந்த வித பிரச்னையும் இருக்காது.


Fixed Deposit: வாடிக்கையாளர்கள் முதிர்வுக்கு முன் பணத்தை எடுக்கலாம்


- புதிய விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் சிறிய டெபாசிட்களை எளிதாக எடுக்க முடியும். 
- FD -இன் மதிப்பு 10,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், முன்கூட்டியே பணம் எடுக்க அனுமதிக்கப்படும். 
- இருப்பினும், இதற்கு வட்டி பொருந்தாது. 
- 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகைகளுக்கு, முதலீட்டாளர்கள் குறைந்தது 10 மாதங்களுக்குப் பிறகு பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். 
- மற்ற வைப்புகளுக்கு, வாடிக்கையாளர்கள் வட்டி முதலீடு இல்லாமல் மூன்று மாதங்களுக்கு அசல் தொகையில் (ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக) அதிகபட்சமாக 50% தொகையை திரும்பப் பெறக் கோரலாம். 
- கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டால், வாடிக்கையாளர்கள் திட்ட காலம் முடிவதற்குள் FD இன் அசல் தொகையை எடுக்க அனுமதி அளிக்கப்படும்.


மேலும் படிக்க | PM Awas Yojana மூலம் வீடு கட்ட பணம் பெற இவை எல்லாம் அவசியம்.... ரூ. 2.5 லட்சம் கிடைக்கும்


நாமினி நியமனம் மற்றும் முதிர்வு அறிவிப்பு தொடர்பான புதிய விதிகள்


ரிசர்வ் வங்கி FD கணக்கிற்கான நாமினி நியமன செயல்முறையையும் மாற்றியுள்ளது. இப்போது NBFC -கள், நாமினி நியமனப் படிவங்களைச் சமர்ப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கும், நாமினி நியமனத்தில் மாற்றங்கள் அல்லது ரத்துகளைச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் ஒப்புகைச் சீட்டை வழங்க வேண்டும். பாஸ்புக் மற்றும் ரசீதில் "பதிவு செய்யப்பட்ட நியமனம்" (“Nomination Registered”) என்ற வார்த்தைகளும் சேர்க்கப்பட வேண்டும். 


FD முதிர்வு தொடர்பான அறிவிப்புகளை நிறுவனங்கள் 14 நாட்களுக்கு முன்பே வெளியிட வேண்டும். முன்னதாக அறிவிப்பு காலம் இரண்டு மாதங்களுக்கு முன்பு என்று இருந்தது.


மேலும் படிக்க | Make Money Online: வெறும் 2 மணிநேரம் போதும் ஆன்லைனில் நல்ல பணம் சம்பாதிக்கலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ