கடந்த 10 நாட்களில் கவுதம் அதானியின் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது அதானி உலகின் டாப்-20 பணக்காரர்களில் இருந்து இரண்டு இடங்கள் மட்டுமே தள்ளி இருக்கிறார். அதானி குழுமத்தின் பங்குகள் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கையை தொடர்ந்து காட்டி வருவதால் அவரின் சொத்த மதிப்பு அதிகரிக்கிறது. இதனால், டாப்-10 உலக பணக்காரர்களுக்கான இடம் அவருக்கு வெகு தொலைவில் இல்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பொருளாதார ஆய்வறிக்கை நிறுவனம் அதானி குழுமத்தின் பங்கு சந்தை முதலீடுகள் குறித்த ஆய்வறிக்கையை ஜனவரி 24 ஆம் தேதி வெளியிட்டனர். அதில், பங்கு முதலீட்டில் அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினர். அதானி குழும பங்குகள் மிகைப்படுத்தி காட்டப்பட்டிருப்பதாகவும், அதன் பின்னணியில் சில தவறான முதலீடுகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த அறிக்கைக்குப் பிறகு அதானி குழும பங்குகள் மளமளவென சரிந்தன. உலக பணக்காரர் பட்டியலில் டாப் 3-ல் இருந்த அவர் திடீரனெ 30 இடங்களுக்கு மேல் சரிந்தார்.


மேலும் படிக்க | எஸ்பிஐ வழங்கும் சிறப்பு டெபாசிட் திட்டம்... இந்த மாதம்தான் கடைசி - மிஸ் பண்ணாதீங்க!


அனைத்து அதானி குழும பங்குகளும் வரலாறு காணாத வீழ்ச்சியை நோக்கி பயணித்தன. முதலீட்டாளர்கள் அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை இழந்தனர். இவையெல்லாம் நாளுக்கு நாள் அதானிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. பல சர்வதேச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அதானி குழுமத்துக்கு கடன் கொடுப்பதை நிறுத்தியதுடன், அந்த குழுமத்தின் பாண்டுகளையும் ஏற்க மாட்டோம் என அதிரடியாக அறிவித்தன. இது அவருக்கு மேலும் பின்னடைவை கொடுத்த நிலையில், உடனடியாக பல்வேறு முயற்சிகளில் இறங்கினார் அதானி.


இதனால், அதானி குழுமத்தில் முன்னணி இந்திய தொழிலதிபர்கள் முதிலீடு செய்ய தொடங்கினர். அடுத்தடுத்து பெரிய தொழிலதிபர்கள் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கியதால், மார்க்கெட்டில் சரிந்து கொண்டிருந்த அதானியின் பங்குகள் மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி பயணித்தன. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் அவரது இடம் மீண்டும் உயரத் தொடங்கியது. இப்போது ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி 22 வது இடத்தில் இருக்கிறார். இதேபோல் அவரது சொத்து மதிப்புகள் உயரும்பட்சத்தில் இன்னும் சில நாட்களில் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 20க்குள் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.    


ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் படி, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மொத்த சொத்து மதிப்பு 54 பில்லியன் டாலர்கள். இந்தப் பட்டியலில் அம்பானி 83.6 பில்லியன் டாலர்களுடன் 11வது இடத்தில் உள்ளார். பெர்னார்ட் அர்னால்ட் 187 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளார். எலோன் மஸ்க் 170 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த 6 நாட்களாக அதானி குழுமத்தின் பல பங்குகள் அப்பர் சர்க்யூட் நோக்கி பயணிக்க தொடங்கியிருக்கின்றன. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடந்த புதன்கிழமையும் ஏற்றத்துடன் முடிவடைந்தன. இதனால் அவரது செல்வமும் பெருகி வருகிறது.


அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் இப்போது 2,039.65 ஆகவும், வணிக துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (APSEs) 712.75 ஆகவும், வணிக சக்தி 186.75 ஆகவும், வணிக பரிமாற்றம் 819.90 ஆகவும், பிசினஸ் கிரீன் எனர்ஜி 619.60 ஆகவும், பிசினஸ் மொத்த எரிவாயு 619.60 ஆகவும், பிசினஸ் மொத்த எரிவாயு 861.90 இல் பிசினஸ் 861.90 ஆகவும் உள்ளன. 


மேலும் படிக்க | Adani: ஏறு முகத்தில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு..!


மேலும் படிக்க | அதானி மொத்தம் இழந்தது எத்தனை லட்சம் கோடி தெரியுமா? சாம்ராஜ்ஜியம் எழுவது சாத்தியமா?


மேலும் படிக்க | மளமளவென சரிந்த அதானி - அம்பானி சொத்துகள்..! இரண்டு பேருக்கும் இவ்வளவு இழப்பு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ