Atal Pension Scheme: பணம் அனைவருக்கும் தேவையான ஒரு விஷயமாக உள்ளது. அதுவும் முதுமையில் நம்மால் வழக்கமான முறையில் பணத்தை ஈட்ட முடியாது என்பதால், அதற்கான திட்டமிடலை இளமையிலேயே செய்ய வேண்டும். ஒருவர் எவ்வளவுதான் ஓய்வூதிய நிதியை குவித்தாலும், வயதான காலத்தில் ஒரு நிலையான மாத வருமானம் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. இந்த தொகையை வைத்து உங்களது அனைத்து முக்கிய பணிகளையும் நீங்கள் செய்து கொள்ளலாம். சிறிய தேவைகளுக்கும் பிறரை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடல் ஓய்வூதியத் திட்டம்


முதுமையில் நிலையான வருமானத்தை வழங்குவதற்காக அரசாங்கம் அடல் ஓய்வூதியத் திட்டத்தை நடத்துகிறது. வருமானம் அதிகம் இல்லாதவர்களும் வரி செலுத்தாதவர்களும், இந்தத் திட்டத்தில் மிகச் சிறிய முதலீட்டைச் செய்து தங்களுக்கு மாதம் ரூ.5000 ஓய்வூதியத்தை எளிதாக ஏற்பாடு செய்துகொள்ளலாம்.


Atal Pension Scheme: வயதுக்கு ஏற்ப பிரீமியம் தீர்மானிக்கப்படுகிறது


மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெற நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? இது உங்கள் வயதைப் பொறுத்தது. 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் 60 வயது வரை முதலீடு செய்ய வேண்டும். உறுப்பினர்களுக்கு 60 வயதிற்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். ஒருவர் எவ்வளவு சீக்கிரம் முதலீட்டைத் தொடங்குகிராரோ, அவ்வளவு குறைவாக பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். 18 வயது முதல் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், பிரீமியமாக ரூ.210 மட்டுமே செலுத்தினால் போதும். 


18-30 வயதுடையவர்கள் எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும்?


18 வயதில் 39 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.210
19 வயதில் 41 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.228
20 வயதில் 40 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.248
21 வயதில் 39 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.269
22 வயதில் 38 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.292
23 வயதில் 37 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.318
24 வயதில் 36 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.346
25 வயதில் 35 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.376
26 வயதில் 34 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.409
27 வயதில் 33 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.446
28 வயதில் 32 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.485
29 வயதில் 31 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.529
30 வயதில் 30 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.577


மேலும் படிக்க | EPS Pension: PF சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள்... முழு லிஸ்ட் இதோ


31 முதல் 40 வயது வரை எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?


31 வயதில் 29 ஆண்டுகளுக்கு மாதம் 630 ரூபாய்
32 வயதில் 28 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.689
33 வயதில் 27 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.752
34 வயதில் 26 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.824
35 வயதில் 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.902
36 வயதில் 24 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.990
37 வயதில் 23 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1087
38 வயதில் 22 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1196
39 வயதில் 21 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1318
40 வயதில் 20 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1454


APY கணக்கை எப்படி திறப்பது


- அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், முதலில் வங்கியில் சேமிப்புக் கணக்கைத் திறக்க வேண்டும். 
- ஏற்கனவே வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால், திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை அங்கிருந்து பெற வேண்டும். 
- படிவத்தில் பெயர், வயது, மொபைல் எண், வங்கி கணக்கு எண் போன்ற அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்ப வெண்டும்.
- தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும். 
- அதன் பிறகு, படிவத்தை வங்கியில் சமர்ப்பிக்கவும். 


இதன் பிறகு உங்களது அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு உங்கள் கணக்கு அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் திறக்கப்படும்.


மேலும் படிக்க |மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த வாரம் குட் நியூஸ்: உயரும் அகவிலைப்படி... சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ