கோ ஏர் விமான நிறுவனம், இன்று, இரண்டாவது நாளாக 17க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையை ரத்து செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமான பணி யாளர் பற்றாக்குறை மற்றும் விமானங்கள் இல்லாததால், கோ ஏர் நேற்று, 18 உள்நாட்டு விமான சேவையை ரத்துசெய்தது. குறைந்த கட்டணத்தில், விமான சேவை வழங்கும், தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றானது கோ ஏர்.


வாடியா குழுமத்தின் கோ ஏர் விமான நிறுவனம், 57 நகரங்களுக்கு, நாளொன்றுக்கு, 200 விமான சேவைகளை இயக்குகிறது. இதில், ஏ–320 நியோ மாடல் விமானங்களின் இயந்தி ரங்களில்ஏற்பட்ட கோளாறு காரணமாக, பல விமானங்கைள சேவையிலிருந்து நிறுத்தி உள்ளது.


இந்நிலையில், நேற்று அந்த விமான நிறுவனத்தின், உள்நாட்டு போக்குவரத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களை கூறி, 21 விமான சேவையை, கோ ஏர் நிறுவனம் ரத்து செய்தது.


தற்போது இன்று இரண்டாவது நாளாக, டெல்லி, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், கொச்சி, பாட்னா, லக்னோ உள்ளிட்ட நகரங்களுக்கான, தனது 17க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையை, கோ ஏர் நிறுவனம் ரத்து செய்திருக்கிறது. இதனால், பயணியர் கடும் பாதிப்பு அடைந்தனர்.


போராட்டங்கள் காரணமாக, விமானங்களை ரத்து செய்திருப்பதாகவும் கோ-ஏர் நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.