Gold Loan: பெரும்பாலான மக்கள் தங்க நகைகளை வாங்குவது தங்களை அழகுபடுத்திக்கொள்வதற்காக மட்டுமல்ல, சில சமயங்களில் தங்களுக்கு ஏற்படும் பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் தான்.  கடனைப் பெறுவதற்கான எளிதான மற்றும் விரைவான வழிகளில் ஒன்று தங்கத்தை அடகு வைப்பது. நகைகளின் தரத்திற்கு வங்கிகள், அடகு கடைகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணம் வழங்கப்படுகிறது.  எந்த காலத்திலும் தங்க நகைகள் ஒரு சிறந்த முதலீடாக தான் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.  பலருக்கும் தங்களது தங்க நகைகளை அடகு வைக்கும்போது மனதிற்குள் ஒருவித பயம் ஏற்படுகிறது, அடமானத்தில் இருக்கும் தங்களது நகைகளுக்கு எதுவும் ஆபத்து வந்துவிடக்கூடுமோ என்கிற பயம் இருந்து வருகிறது.  ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட துறை கடன் வழங்குபவர்கள், நீங்கள் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தியவுடன், உங்கள் தங்கத்தை அதே தூய்மையில் பெறுவதை உறுதி செய்வார்கள் என்பதால் நீங்கள் அதைப்பற்றி பயப்பட வேண்டிய தேவையில்லை.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | PAN Aadhaar Link: இவர்கள் பான் - ஆதார் கார்டை இணைக்க தேவையில்லை!


நீங்கள் தங்கத்தை எந்த வடிவத்திலும் அடமானம் வைக்கலாம், அதாவது தங்கத்தை நகைகள், நாணயங்கள், பார்கள் என எந்தவொரு வடிவத்திலும் அடமானம் வைத்து பணத்தை பெற்று கொள்ளலாம்.  பொதுவாக நாம் தங்கத்தை அடமானம் வைக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் வைத்து, ஒப்பிட்டு பார்த்து அதற்கு பிறகு அடமானம் வைக்க வேண்டும்.  இப்போது தங்கத்தை அடமானம் வைப்பதற்கு முன்னர் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகளை பார்ப்போம்.


1) வட்டி விகிதம்: வங்கிகள், நிதி நிறுவனங்கள் என வெவ்வேறு கடன் வழங்கும் நிறுவனங்களின் வட்டி விகிதங்களை சரிபார்க்க வேண்டியது முதன்மையான ஒன்று.  குறைந்த வட்டி விகிதத்தைக் கண்டறிய வெவ்வேறு நிறுவனங்களின் வட்டி விகிதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும், இதன் மூலம் உங்கள் தங்கத்தின் சிறந்த மதிப்பைப் பெற முடியும்.


2) கடன்-மதிப்பு (எல்டிவி) விகிதம்: எல்டிவி விகிதம் என்பது உங்கள் தங்கத்தின் மதிப்புக்கு எதிராக நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகையாகும்.  வெவ்வேறு கடன் வழங்கும் நிறுவனங்களின் எல்டிவி விகிதங்களை சரிபார்த்து, அதில் எந்த கடன் நிறுவனம் அதிக எல்டிவி விகிதத்தை வழங்குகிறது என்பதை தேர்வு செய்து தங்கத்தை அடமானம் வைப்பது சிறந்தது.


3) செயலாக்கக் கட்டணம்: கடன் வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் செயலாக்க கட்டணத்தை வசூலிக்கிறது.  எனவே நீங்கள் தங்கத்தை அடமானம் வைக்கும் முன்னர் வெவ்வேறு கடன் வழங்கும் நிறுவனங்களின் செயலாக்கக் கட்டணத்தைச் சரிபார்த்து, குறைந்த செயலாக்கக் கட்டணத்தை எந்த கடன் வழங்கும் நிறுவனம் வசூலிக்கிறது என்பதை பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.


4) திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள்: பல்வேறு கடன் வழங்கும் நிறுவனங்களிடம் உள்ள திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள் பற்றி நீங்கள் சரிபார்க்க வேண்டும், அதில் எந்த கடன் வழங்கும் நிறுவனம் உங்களுக்கு வசதியான வகையில் திருப்பிச் செலுத்தும் விருப்பங்களை வழங்குகிறது என்பதை சரிபார்த்து அதற்கேற்ப கடன் வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்.


5) கடன் வழங்குபவரின் நம்பகத்தன்மை: அமைப்புசாரா துறை கடன் வழங்கும் நிறுவனத்தில் தங்கத்தை அடமானம் வைப்பதற்கு பதிலாக, ஒழுங்கமைக்கப்பட்ட துறையின் பின்னணியில் இருந்து கடன் வழங்கும் நிறுவனங்களை அணுகுவதே சிறந்தது என்று எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.  அதாவது மாநில அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கத்தின் நேரடி பார்வையின் கீழ் செயல்படும் கடன் வழங்கும் நிறுவனங்களையே நீங்கள் தேர்வு செய்வது நல்லது.


மேலும் படிக்க | ஆதார் - பான் இல்லாமல் நீங்கள் இனி பணத்தை சேமிக்க முடியாது: மத்திய அரசு அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ