Gold rates today: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்கிறது
தங்கத்தின் விலைகள் மூன்றாவது நாளாக உயர்ந்துள்ளது. புதுதில்லியில், 22 காரட் தங்கத்தின் விலை10 கிராமுக்கு ரூ .43,860 லிருந்து 44,150 ஆக உயர்ந்தது. மும்பையில் 43,680 என்ற விலையில் விற்பனையானது.
புதுடெல்லி: தங்கத்தின் விலைகள் மூன்றாவது நாளாக உயர்ந்துள்ளது. புதுதில்லியில், 22 காரட் தங்கத்தின் விலை10 கிராமுக்கு ரூ .43,860 லிருந்து 44,150 ஆக உயர்ந்தது. மும்பையில் 43,680 என்ற விலையில் விற்பனையானது.
முக்கியமான சில நகரங்களில் இன்றைய தங்க நிலவரம்:
செவ்வாய்க்கிழமையன்று காலையிலேயே தங்கத்தின் விலை சற்று அதிகரித்துக் காணப்பட்டது. விலைகள் தொடர்ந்து மூன்றாவது நாளிலும் ஓரளவு உயர்ந்துள்ளது. குட் ரிட்டர்ன்ஸ் வலைத்தளத்தின்படி, 22 காரட் தங்கத்தின் 10 கிராம் விலை நேற்று ரூ .43, 520 லிருந்து ரூ .160 அதிகரித்து ரூ .43,680 ஆக உள்ளது.
Also Read | தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டும் மக்கள், தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ
கலால் வரி மற்றும் மாநில வரி காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் விலை இந்தியா முழுவதும் வேறுபடுகிறது. இந்த வாரம் தங்கத்தின் (Gold) விலை 10 கிராமுக்கு ரூ .50,000 க்கும் குறைவாகவே இருந்தது. பிப்ரவரி 1 முதல், தங்கத்தின் விலைசரிந்துள்ளது. தங்கம் விலை குறைந்ததால், வியாபாரம் புத்துயிர் பெற்றது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்படுகிறது.
முந்தைய வர்த்தகத்தில், ஸ்பாட் தங்கம், சர்வதேச சந்தையில் 0.3 சதவீதம் உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 1,705.62 அமெரிக்க டாலராக இருந்தது. அமெரிக்காவில் தங்க வரத்தகத்தில் விலை 0.3 சதவீதம் உயர்ந்து 1,703 அமெரிக்க டாலராக உள்ளது. வெள்ளியின் விலையும் 0.8 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 25.38 அமெரிக்க டாலராக உள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR