Gold / Silver Prices today: சர்வதேச சந்தையில் அதிகரித்த டாலர் விலை மற்றும் பத்திர பரிமாற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்தது. இது உள்நாட்டு சந்தையை பாதித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுமார் 1.9 டிரில்லியன் டாலர் மதிப்பிலான உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது குறித்து ஒரு பெரிய முடிவை இன்று எடுக்கக்கூடும். இந்த முடிவின் தாக்கமும் விளைவும் கூடிய விரைவில் தங்கத்தின் சந்தையிலும் காணப்படும்.


இருப்பினும், வெள்ளிக்கிழமை உள்நாட்டு சந்தையில் MCX தங்கம் (Gold) பத்து கிராமுக்கு 0.02% குறைந்து ரூ .47,497 ஆகவும், வெள்ளி ஒரு கிலோ கிராமுக்கு 0.34% அதாவது ரூ. 233 குறைந்து 68,725 ரூபாயாகவும் சரிந்தது. வியாழக்கிழமை, தங்கத்தின் விலை பத்து கிராமுக்கு ரூ .36 அதிகரித்து ரூ .47,509 ஆகவும், வெள்ளி ரூ .454 உயர்ந்து கிலோவுக்கு ரூ .69,030 ஆகவும் இருந்தது.


அகமதாபாத்தில் கோல்ட் ஸ்பாட் பத்து கிராமுக்கு 47907 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. கோல்ட் ஃப்யூசர்ஸ் பத்து கிராமுக்கு 47450 என்ற விலையில் விற்பனையானது.


இருப்பினும், தங்கத்தின் தேவை இன்னும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்த தேவை காரணமாக தற்போதுள்ள விலையிலிருந்து தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்பது அவர்களது கருத்தாக உள்ளது.


இதற்கிடையில், சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி (Silver) இரண்டின் நிலையும் பலவீனமாகவே உள்ளது. கோல்ட் ஸ்பாட் ஒரு அவுன்ஸ் 0.3% குறைந்து 1820.73 டாலராகவும், தங்க ஃப்யூச்சர்ஸ் 0.3% குறைந்து 1821.10 டாலராகவும் இருந்தது. பிளாட்டினம் ஒரு அவுன்ஸ் 1.9% சரிந்து 1211.01 டாலராக இருந்தது. வெள்ளி 0.2% சரிந்து 26.89 ஆக இருந்தது.


சென்னையின் இன்றைய தங்கம் / வெள்ளி விலை நிலவரம்


இன்று சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் 4,483 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையை விட 23 ரூபாய் குறைவாகும். தங்கத்தின் விலை நேற்று 4506 ரூபாயாக இருந்தது.


சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் 5062 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையை விட 148 ரூபாய் அதிகமாகும். தங்கத்தின் விலை நேற்று 4914 ரூபாயாக இருந்தது.


ALSO READ: வீட்டில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு good news: GMS திட்டத்தின் கீழ் பாதுகாப்பு, வருமானம்!!


வீட்டில் தங்கம் உள்ளதா?


விரைவில் தங்கத்தை வீட்டில் வைத்திருப்பதற்கான விதிகளில் அரசாங்கம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. தங்கத்தை பணமாக்கும் திட்டத்தில் (Gold Monetization Scheme) அரசாங்கம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. இந்த திட்டத்தில் அனைத்து அரசு வங்கிகளும் சேர்க்கப்படுகின்றன.


தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வங்கியின் குறைந்தபட்சம் 50% கிளைகளில் ஜிஎம்எஸ் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்படுவதை அரசாங்கம் கட்டாயமாக்கக்கூடும். இந்த திட்டத்தின் கீழ் நகைக்கடைக்காரர்களுக்கும் தங்க வைப்பு பெறும் உரிமை கிடைக்கக்கூடும். மேலும், இந்த திட்டத்தின் கீழ், வங்கிகள் நகை விற்பனையாளர்கள் மூலம் தங்க டெபாசிட்டைப் பெற முடியும். புதிய மாற்றங்களின் கீழ், இந்தத் திட்டத்துடன் அதிக வாடிக்கையாளர்களை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.


தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் கீழ், தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்கு 2.25 சதவீதம் வரை வங்கி உங்களுக்கு வட்டி செலுத்தும். நடுத்தர காலம் மற்றும் நீண்ட காலத்தைத் தவிர, இந்த திட்டத்தில் நீங்கள் 1.3 ஆண்டுகள், 2.4 ஆண்டுகள் மற்றும் 5 நாட்களுக்கு கூட தங்கத்தை டெபாசிட் செய்யலாம்.


ALSO READ: Gold Price Today, 08 February 2021: தங்கம் விலை குறைவு: இன்றைய விலை நிலவரம் என்ன?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR