Gold Price / Silver Price Today, March 11, 2021: வியாழக்கிழமை தங்க விலையில் எந்த மாற்றமும் இல்லை. 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ .43,430 ஆகவும், 24 காரட் தங்கத்தின் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ .44,430 ஆகவும் உள்ளது. 100 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 4,34,300 ரூபாயாகவும் 24 காரட் 100 கிராம் தங்கத்தின் விலை 4,44,300 ரூபாயாகவும் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரங்காளை பார்க்கலாம்:


மும்பையில், 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை (Gold Price) ரூ .43,430 ஆகவும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை 44,430 ரூபாயாகவும் வர்த்தகம் செய்யப்படுகின்றது. டெல்லியில், 10 கிராம் 22 காரட் தங்கம் ரூ .150 உயர்ந்து 43960 ரூபாயாக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கம் ரூ .47,960 ஆக உள்ளது.


ALSO READ: Gold rates today: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ


சென்னையில், 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ .42,390 ஆகவும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை 46,240 ரூபாயாகவும் வர்த்தகம் செய்யப்படுகின்றது. கொல்கத்தாவில், 22 காரட் 10 கிராம் தங்கம் 44,160 ரூபாய்க்கும் 24 காரட் 10 கிராம் தங்கம் 46,800 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.


எனினும், கலால் வரி மற்றும் மாநில வரி காரணமாக இந்தியா முழுவதும் தங்கம் (Gold) மற்றும் வெள்ளி நகை விலைகள் வேறுபடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


நேற்றைய வர்த்தகத்தில், தேசிய அளவில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ .43,430 ஆக குறைந்தது. மார்ச் 9 அன்று தங்கத்தின் விலை ரூ .43,680 ஆக இருந்தது.


ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4239 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.


ஒரு கிராம் வெள்ளி (Silver) நேற்று மாலை நிலவரப்படி ரூ. 71.50-க்கு விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 0.20 விலை உயர்ந்து ரூ.71.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR