Gold Price Today, March 17: இந்தியாவில் இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ .43,840 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ .44,840 ஆகவும் உள்ளது. 100 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ .4,38,400 ஆகவும், 100 கிராம் 24 காரட் தங்க வீதம் ரூ .4,48,400 ஆகவும் உள்ளது. பொதுவாக, இந்தியா முழுதும் பல மாநிலங்கள் மற்றும் நகரங்களில் தங்கத்தின் விலை மாறுபடுவதுண்டு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பெரும் சாத்தியக்கூறு கொண்ட முதலீடாக கருதுகின்றனர். பணவீக்கத்திற்கான நல்ல உபாயமாக தங்கம் கருதப்படுகின்றது.  


இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய 22 காரட் தங்க விலை (Gold Price) நிலவரத்தைக் காணலாம்: டெல்லியில் தங்கத்தின் விலை ரூ .44,150, மும்பையில் ரூ .43,840, கொல்கத்தாவில் ரூ .44,270, சென்னையில் ரூ .42,270, பெங்களூருவில் ரூ .42,010, ஹைதராபாத்தில் ரூ .42,010, புனேவில் ரூ .43,840 , லக்னோவில் ரூ .44,150, அகமதாபாத்தில் ரூ .44,500, பாட்னாவில் ரூ .43,840, சண்டிகரில் ரூ .44,150, கேரளாவில் ரூ .42,010, புவனேஸ்வரில் ரூ .42,010 ஆக உள்ளது.


ALSO READ: சும்மா இருக்கும் தங்கத்தை வைத்து சூப்பரா சம்பாதிக்க SBI Gold monetization scheme: முழு விவரம் உள்ளே


இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய 24 காரட் தங்க (Gold) விலை நிலவரத்தைக் காணலாம்:  டெல்லியில் தங்கத்தின் விலை ரூ .48,160, மும்பையில் ரூ .44,840, கொல்கத்தாவில் ரூ .46,910, சென்னையில் ரூ .46,110, பெங்களூருவில் ரூ .45,830, ஹைதராபாத்தில் ரூ .45,830, புனேவில் ரூ .44,840 , லக்னோவில் ரூ .48,160, அகமதாபாத்தில் ரூ .46,370, பாட்னாவில் ரூ .44,840, சண்டிகரில் ரூ .48,160, கேரளாவில் ரூ .45,830, புவனேஸ்வர் ரூ .45,830 ஆக உள்ளது.


குறிப்பிடப்பட்டுள்ள புதன்கிழமைக்கான தங்க விலை விவரங்களில் சரக்கு மற்றும் சேவை வரி (GST), மூலத்தில் வசூலிக்கப்பட்ட வரி (TCS) மற்றும் பிற வரிகள் சேர்க்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், சாதாரண தங்க விலை விகிதங்களுக்கும் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR