அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வு பெறும் வயது 61 வயது வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது எந்த மாநிலத்தில் தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கானா மாநில அரசு தான் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. மற்றுமொரு நல்ல செய்தியாக, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 30 சதவீத சம்பள உயர்வையும் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் திங்களன்று அறிவித்தார்.


இந்த ஊதிய உயர்வு 11 வது ஊதிய திருத்த ஆணையத்தின் (Pay Revision Commission (PRC)) கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பொருந்தும். மாநில சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சந்திரசேகர ராவ், இந்த உத்தரவுகள் 2021 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று கூறினார்.


Also Read | உங்களிடம் இந்த ஒரு ரூபாய் நாணயம் இருக்கிறதா? இதோ 10 கோடி பிடியுங்கள் கோடீஸ்வரரே!


ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மேலதிக வயது 61 வயது வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார். 2018 தேர்தல் அறிக்கையில், ஓய்வூதிய வயதை 58 லிருந்து 61 ஆக உயர்த்துவதாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) உறுதியளித்திருந்தது.


சம்பள உயர்வு மாநிலத்தில் பணிபுரியும் சுமார் 9.17 லட்சம் ஊழியர்களுக்கு பயனளிக்கும். கடந்த காலங்களில் ஊழியர்களுக்கு மட்டுமே ஊதிய திருத்தம் வழங்கப்பட்டதைப் போலல்லாமல், இந்த முறை ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் ஊழியர்கள், ஹோம் கார்ட்ஸ், அங்கன்வாடி மற்றும் ஆஷா தொழிலாளர்கள், எஸ்.இ.ஆர்.பி ஊழியர்கள், வித்யா தன்னார்வலர்கள், கேஜிபிவி மற்றும் எஸ்எஸ்ஏ ஊழியர்கள் உட்பட பலதரபட்டவர்களுக்கும் இந்த பயன்களை வழங்கலாம் என்ற பிஆர்சி பரிந்துரைகளை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்தது.  


Also Read | தேர்தல் வேட்பாளர்களுக்கு கொரோனா; டிஜிட்டல் பிரச்சாரத்தில் இறங்கும் வேட்பாளர்கள்


கே.சி.ஆர், ஊழியர்களுக்கான ஓய்வூதியத் தொகையை 12 லட்சம் ரூபாயில் இருந்து 16 லட்சமாக அதிகரிப்பதாக அறிவித்தார். ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 15 சதவீத கூடுதல் அளவு ஓய்வூதியம் வழங்குவதற்கான வயது வரம்பை 75 வயது முதல் 70 வயது வரை குறைக்கவும் அரசாங்கம் முடிவு செய்தது.


கடமையில் இருந்தபோது இறந்த சிபிஎஸ் (பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியக் கொள்கையை நீட்டிக்கவும் தெலுங்கானா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


Also Read | Daddy Virat duties: ODI போட்டிகளுக்காக புனேவுக்கு செல்லும் விராட் குடும்பம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR