வங்கி வாடிக்கையாளருக்கு ஏடிஎம்களில் பணம் கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்ற முடிவை ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விதி, 2021 அக்டோபர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும். அதாவது ஒரு மாதத்தில் ஏடிஎம் இயந்திரம் ஒன்றில் மொத்தமாக 10 மணிநேரம் பணமில்லாமல் இருந்தால் ரிசர்வ் வங்கி, சம்பந்தப்பட்ட வங்கிக்கு அபராதம் விதிக்கும் என்ற அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஏடிஎம்களில் பணம் இல்லாமல் போவதால், பொதுமக்களுக்கு ஏற்படும் அச சிரமம் குறித்து கவலை கொண்ட ரிசர்வ் வங்கி, அத்தகைய இயந்திரங்களில் சரியான நேரத்தில் பணத்தாள்களை நிரப்ப தவறும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.


Also Read | வங்கி துறையில் ஊதியம், பென்ஷன், EMI தொடர்பான புதிய விதிகள் அமல்


2021 அக்டோபர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும். அதாவது ஒரு மாதத்தில் ஏடிஎம் இயந்திரம் ஒன்றில் மொத்தமாக 10 மணிநேரம் பணமில்லாமல் இருந்தால் இனிமேல் வங்கிகள் அபராதத் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.


"ஏடிஎம்கள் நிரப்பப்படாததற்கான அபராதம் திட்டம் ஏடிஎம்கள் மூலம் பொதுமக்களுக்கு போதுமான பணம் கிடைப்பதை உறுதி செய்ய எடுக்கப்பட்டுள்ளது" என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய ரிசர்வ் வங்கி பணத்தாள்களை வழங்குவதற்கான ஆணையை விதித்துள்ளது. வங்கிகள் தங்கள் கிளைகள் மற்றும் ஏடிஎம்கள் மூலம் பொதுமக்களுக்கு ரூபாய் நோட்டுகளை வழங்குவதன் மூலம் இந்த ஆணையை நிறைவேற்றுகின்றன.


Also Read | வங்கி வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி! வங்கி முழுகினாலும் பணத்துக்கு கேரண்டி!


இதுதொடர்பாக, ஏடிஎம்களின் பணமதிப்பிழப்பு காரணமாக செயலிழந்த நேரம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்போது, மக்கள் ஏடிஎம் செயல்படாமல் இருப்பதால் பணம் கிடைக்காமல் தவித்ததையும் பார்த்த ஆர்.பி.ஐ இது தொடர்பான விதிமுறைகளை வகுத்து வந்தது.
 
அதனடிப்படையில், வங்கிகள்/ ஒயிட் லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் (White Label ATM Operators (WLAOs)) ஏடிஎம்களில் பணம் கிடைப்பதை கண்காணிக்க வேண்டும். பணம் ஏடிஎம்களில் இல்லாமல் இருப்பதைத் தவிர்க்க சரியான நேரத்தில் பணத்தாள்களை நிரப்புவதை உறுதி செய்யவேண்டும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


"இந்த விஷயத்தில் ஆர்.பி.ஐ தீவிரமாகப் கண்காணிக்குக்ம்., மேலும் 'ஏடிஎம்களை நிரப்பாததற்கான அபராதத் திட்டத்தின் கீழ்,' அபராதம் விதிக்கப்படும்" என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Also Read | வங்கி ஊழியர்களுக்கு RBI அளித்த சூப்பர் செய்தி: இனி ஆண்டுக்கு 10 நாட்கள் Surprise Leave!!


இத்திட்டம் அக்டோபர் 01, 2021 முதல் நடைமுறைக்கு வரும். ஒரு மாதத்தில் ஏடிஎம் இயந்திரம் ஒன்றில் மொத்தமாக 10 மணிநேரம் பணமில்லாமல் இருந்தால் இனிமேல் வங்கிகள் . 10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.


ஒயிட் லேபிள் ஏடிஎம்களில் (டபிள்யுஎல்ஏ), அபராதம் அந்த குறிப்பிட்ட டபிள்யூஎல்ஏவின் பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் வங்கிக்கு விதிக்கப்படும்.


வங்கி, அதன் விருப்பப்படி, WLA ஆபரேட்டரிடமிருந்து அபராதத்தை திரும்பப் பெறலாம். 2021 ஜூன் மாத இறுதி நிலவரப்படி, நாட்டில் பல்வேறு வங்கிகளின் மொத்தம் 2,13,766 ஏடிஎம்கள் செயல்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது..


Also Read | Free Petrol: இந்த பெயர் இருந்தால், உங்களுக்கு பெட்ரோல் இலவசம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR