CGHS: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய அரசு பணிகளில் உள்ளார்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. CGHS மற்றும் ECHS சேவைகளின் வரம்பை அரசாங்கம் அதிகரித்துள்ளது. இப்போது மத்திய அரசு ஊழியர்கள் 40 தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் மற்றும் நோய் கண்டறியும் மையங்களில் சிகிச்சை பெறலாம். இது குறித்து இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

40 தனியார் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையங்கள் சேர்க்கப்பட்டன


எற்கனவே இருந்த பட்டியலில் அரசாங்கம் 40 மருத்துவமனைகளை சேர்த்துள்ளது. இந்த அனைத்து மருத்துவமனைகளின் கட்டண பட்டியல் CGHS மற்றும் ECHS இன் கீழ் வரும் ஊழியர்களுக்கும் சமமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிகிச்சைக்கான செலவை பின்னர் அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ECHS எனப்படும் முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (Ex-Servicemen Contributory Health Scheme) அதன் குழுவில் 40 தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் மற்றும் நோய் கண்டறியும் மையங்களை சேர்த்தது. சமீபத்தில் நடந்த ஸ்கிரீனிங் கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.


CGHS மற்றும் ECHS -க்கு அதிகரித்த வசதிகள்


இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ள புதிய மருத்துவமனைகளின் பட்டியல் தொடர்பான முறையான உத்தரவை ECHS இன் நிர்வாக இயக்குநர் பெற்றுள்ளார். இந்த செயல்முறை பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் செய்யப்பட்டுள்ளது. இதன் படி ECHS பயனாளிகளுக்கு மருத்துவமனை சேவைகள் மற்றும் சிகிச்சை சேவைகள் வழங்கப்படும். இப்போது ECHS -இன் ஏற்கனகே இருந்த கணக்கில் 40 தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் மற்றும் நோய் கண்டறியும் மையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | தீபாவளி போனஸ் அறிவிப்பு - தமிழ்நாடு ரேசன் கடை ஊழியர்கள் குஷி... எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?


அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் நல்ல சிகிச்சை கிடைக்கும்


- குழுவில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் நோயறிதல் மையங்களும் பாதுகாப்பு அமைச்சகம் நிர்ணயித்துள்ள நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்.
- இதில் சேவை கட்டணங்களும் அடங்கும். 
- சிகிச்சைக்கான கட்டணம் குழுவால் நிறைவேற்றப்பட்ட கட்டணங்களின்படி பட்டியலின் படி இருக்கும். 
- மேலும், இவை CGHS அதாவது மத்திய அரசு சுகாதாரத் திட்ட (Central Government Health Scheme) விகிதங்களுடன் சரிசெய்யப்படும். 
- இதன் பொருள் என்னவென்றால், CGHS ஊழியர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அதே கட்டணத்தில் ECHS இன் கீழ் வரும் ஊழியர்களும் சிகிச்சை பெற முடியும். 
- இந்த 40 மருத்துவமனைகளின் பட்டியல் CGHS -இலும் சேர்க்கப்பட்டுள்ளது.


இது தவிர, CGHS உடனான குழுவில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் ECHS உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது அவற்றின் CGHS நிலைக்கான சான்றிதழை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. CGHS பேனல் மருத்துவமனைகளின் நிலை அவற்றின் CGHS அங்கீகாரம் செயலில் இருக்கும் வரை செல்லுபடியாகும். மேலும், அவற்றின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படலாம். NABH (மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார வாரியம்) அங்கீகாரம் பெற்ற சேவைகளும் ECHS உடனான குழுவில் சேர்க்கப்படும். இது அவற்றின் NABH சான்றிதழின் காலத்திற்கு செல்லுபடியாகும். இசிஎஹ்எஸ் உறுப்பினர்களுக்கு (ECHS Members) அதிக வசதிகள் மற்றும் சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்கான ஒரு முக்கியமான படியாக இந்த நடவடிக்கை உள்ளது.


CGHS, ECHS: இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?


- CGHS, ECHS என இரண்டும் இந்திய அரசின் சுகாதாரத் திட்டங்களாகும்.
- ஆனால் அவை வெவ்வேறு ஊழியர் குழுக்களுக்கு சேவைகளை வழங்குகின்றன. 
- CGHS மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மருத்துவ சேவைகளுக்கானது.
- ECHS ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கான மருத்துவ சேவைகளுக்கானது.
- ECHS இல் CGHS ஐ விட அதிகமான குழு மருத்துவமனைகள் உள்ளன.
- தொலைதூர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளும் இதில் அடங்கும்.


மேலும் படிக்க | தீபாவளி போனசுக்கும் வரி விதிக்கப்படுமா? வருமான வரி சட்டம் கூறுவது என்ன?


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ