புதுடெல்லி: காசோலை அனுமதி (Cheque clearance) விதிகளை மாற்ற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. 18 ஆயிரம் வங்கி கிளைகளை பாதிக்கும் காசோலை விதிகளுடைய முறையின் நோக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. தகவல்களின்படி, இந்த ஆண்டு செப்டம்பர் முதல் புதிய விதிகள் செயல்படுத்தப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CTS-ன் வரம்பு விரிவடையும்


கட்டணம் மற்றும் தீர்வு முறையை மேலும் சிறப்பாகவும், வேகமாகவும், துல்லியமாகவும் மாற்ற மீதமுள்ள 18,000 கிளைகளை புதுப்பிக்க ரிசர்வ் வங்கி (Reserve Bank) முடிவு செய்துள்ளது. மையப்படுத்தப்பட்ட தீர்வு முறையான Cheque Truncation System-மின் கீழ் இல்லாத அனைத்து கிளைகளும் செப்டம்பர் மாதத்திற்குள் CTS வரம்பிற்குள் கொண்டுவரப்படும். CTS 2010 முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 1 லட்சம் 50 ஆயிரம் வங்கி கிளைகள் அதன் கீழ் உள்ளன.


Cheque Truncation System என்றால் என்ன


CTS அதாவது Cheque Truncation System என்பது காசோலையை கிளியர் செய்யும் ஒரு செயல்முறையாகும். இதில் வழங்கப்பட்ட காசோலை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட வேண்டியதில்லை. பொதுவாக, காசோலை டெபாசிட் செய்யப்பட்ட இடத்திலிருந்து, காசோலை வழங்குபவரின் வங்கி கிளைக்கு காசோலை அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக காசோலையை கிளியர் செய்ய அதிக நேரம் எடுக்கும்.


2010 முதல், இந்தியாவில் சி.டி.எஸ் இன் கீழ் காசோலைகள் கிளியர் செய்யப்படுகின்றன. இதில் நாட்டின் 1 லட்சம் 50 ஆயிரம் வங்கி கிளைகள் இணைக்கப்பட்டுள்ளன. இப்போது மீதமுள்ள கிளைகளும் விரைவில் சி.டி.எஸ் முறையில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


ALSO READ: டெபிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த புதிய விதி பற்றி உங்களுக்கு தெரியுமா?


Cheque Truncation System முறையின் நன்மைகள்


CTS மூலம் காசோலைகள் (Cheque) விரைவாக கிளியர் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விரைவாக பணம் கிடைக்கும். இது தவிர, சி.டி.எஸ் பலவித செலவுகளையும் குறைக்கிறது. தளவாடங்களுடன் தொடர்புடைய சிக்கல்களையும் குறைக்கிறது. இது முழு வங்கி முறைக்கும் பயனளிக்கிறது.


ஒரு காசோலையை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புவதற்கான செலவும் நீக்கப்படுகிறது. எனவே, காசோலை செயலாக்கம் வேகமாக இருக்கிறது.


இன்றைய காலகட்டத்தில் காசோலையின் முக்கியத்துவம்


இன்றைய காலம் டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் காலமாக இருக்கிறது. ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை மாற்ற நாம் நெட்பேங்கிங்கைப் பயன்படுத்துகிறோம். ரியல் டைம் மொத்த தீர்வு (RTGS) மற்றும் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) ஆகியவை சில நிமிடங்களில் பணத்தை மாற்றுவதற்கு மிகவும் உபயோகமாகவும் பிரபலமாகவும் உள்ளன.


இது தவிர, UPI கட்டணம் செலுத்தும் முறை அனைத்தையும் மிகவும் எளிதாக்கியுள்ளது. Paytm, Googlepay, Phonepe போன்ற பல வணிக வசதிகள் உள்ளன. ஆனால் காசோலைகளின் முக்கியத்துவம் இன்னும் குறையவில்லை என்பதும் உண்மையே. நாட்டில் காசோலைகள் இன்னும் பணம் செலுத்துவதற்கான முக்கிய வழிமுறையாக இருக்கின்றன. காசோலைகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, காசோலையை குறுகிய காலத்தில் பணமாக மாற்றும் (clearance) திறனை அதிகரிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.


ALSO READ: IRCTC News: இந்த வழியில் கிடைக்கும் 2000 வரை cashback, முழு விவரம் உள்ளே!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR