புது டெல்லி: விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) லண்டன் ஹீத்ரோ (London Heathrow Airport) விமான நிலையத்தில் ஒரு 'ஸ்லாட்' கிடைத்துள்ளது. அதாவது அடுத்த மாதம் செப்டம்பர் 1 முதல் லண்டனுக்கு விமான சேவையைத் தொடங்க விமான நிறுவனத்திற்கு உதவும். ஸ்பைஸ்ஜெட் படி, 'ஏர் பப்பில்' (Air Bubble) ஒப்பந்தத்தின் கீழ் இந்த சேவையை அவர்கள் பெற்றுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச விமானங்கள் சேவை தொடங்கிய பிறகு, முன்பு போல வழக்கமான விமான சேவையை அனுமதிக்க, இது முன்னோட்டமாக இருக்கும். பின்னர் மெது மெதுவாக விமான சேவை விரிவாக்கப்படும். ஏர் பப்ப்ளே (Air Bubble) என்பது இரு நாடுகளின் விமான நிறுவனங்கள் சில விதிமுறைகளுடன் சர்வதேச விமானங்களை இயக்கக்கூடிய ஒரு அமைப்பாகும்.


ALSO READ |  கொரோனா வைரஸ் தாக்கம்; SpiceJet இன் 1 + 1 சலுகை அறிமுகம்...முந்துங்கள்!!


இது இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான விமான சேவையை ஏர் பப்ப்ளே நடத்தி வருகிறது. இது அக்டோபர் 23 வரை நடைமுறையில் இருக்கும். வழக்கமான செயல்பாடுகள் தொடங்கிய பின்னர் இது விரிவாக்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


குளிர்காலத்தில் (Winter Season) வழக்கம் போல விமான சேவை இயக்க ஒப்பந்தத்தை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.


ஸ்பைஸ்ஜெட் சிஎம்டி அஜய் சிங் கருத்துப்படி, லண்டன் இந்தியாவிலிருந்து மிகவும் பரபரப்பான நீண்ட தூர இலக்குகளில் ஒன்றாகும், இது ஸ்பைஸ்ஜெட்டின் முக்கிய மைல்கல்லாகும்.


ALSO READ |  180 பேருடன் அவசர அவசரமாக தரையிறங்கிய SpiceJet விமானம்.. எரிபொருள் கசிவு என சந்தேகம்


அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்களுக்கான விமான சேவைகளை இந்தியா தொடங்கியுள்ளது என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம். இது இரு நாடுகளுக்கும் இடையே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயணம் தொடங்கிய பின்னர், பயணிகள் பிடிக்க வேண்டிய சில புதிய வழிகாட்டுதலை டெல்லி விமான நிலையம் வெளியிட்டது. சர்வதேச விமானங்களில் இருந்து டெல்லிக்கு வரும் பயணிகள் 7 நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலில் தங்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறியிருந்தார். இதற்குப் பிறகு, அவர்கள் 7 நாட்களுக்கு வீட்டிலும் (Home Quarantine) தனிமைப் படுத்தப்படுவார்.