Income Tax Department: சுமார் 80 லட்சம் வரி செலுத்துவோருக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி உள்ளது. வருமான வரித்துறை சுமார் 80 லட்சம் வரி செலுத்துவோருக்கு எதிராக உள்ள சிறிய அளவிலான வரி கோரிக்கைகளை நீக்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடைமுறை குறித்த தகவல்களை விளக்கி ஒரு தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (Central Board of Direct Taxes) தலைவர் நிதின் குப்தா சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CBDT கூறியது என்ன?


இது பற்றி கூறிய CBDT தலைவர், “நாங்கள் இந்த சிறிய அளவிலான வரி கோரிக்கைகளை நீக்கி விடுவோம். இப்படிப்பட்ட சிறிய அளவிலான வரி கோரிக்கைகளை வருமான வரித்துறையின் (Income Tax Department) பதிவுகளிலிருந்து நீக்குவதாக உள்ளோம். இதுகுறித்து வரி செலுத்துவோர் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. இது பற்றி விளக்கம் கூறவோ, அல்லது வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ வருமான வரித்துறை அவர்களை தொடர்பு கொள்ளாது” என்று கூறினார்


இது பற்றி மேலும் விளக்கிய குப்தா இந்த செயல்முறையால் வரி செலுத்துவோருக்கு (Taxpayers) எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தார். எனினும் இந்த செயல்முறைகள் வரி செலுத்துவோரின் ஈ-பைலிங் போர்ட்டலில் (e-Filing Portal) வைக்கப்படும். இதன் மூலம் இந்த விவரங்களை வரி செலுத்தும் தனி நபர்கள் எப்போது வேண்டுமானாலும் அணுக முடியும். மேலும், இவற்றில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதை வருமான வரித்துறை தீர்த்து வைக்கும்.


மேலும் படிக்க | FD: 1001 நாட்களுக்கான முதலீட்டிற்கு 9.5% வட்டி... மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்...!


வரி (Income Tax) செலுத்தும் தனி நபர்களுக்கு இந்த கோரிக்கைகளில் எதையாவது சரி செய்ய வேண்டுமானாலோ, அல்லது, ரீஃபண்ட் வழக்குகள் (Refund Cases) ஏதாவது நிலுவையில் இருந்தாலோ அவற்றுக்கும் தீர்வு காணப்படும் என்று அவர் மேலும் கூறினார். இது தொடர்பான ஒரு தெளிவான உத்தரவு கொண்டு வரப்படும். அதில் வரி செலுத்துவோருக்கு உள்ள அனைத்து சந்தேகங்களும் தெளிவாகும். வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையால் சுமார் 80 லட்சம் வரி செலுத்துவோர் பயனடைவார்கள என்று CBDT தலைவர் கூறினார்.


நிதி அமைச்சர் கூறியது என்ன?


முன்னதாக, வியாழக்கிழமை, அதாவது பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை (Interim Budget) தாக்கல் செய்தார். அவர் தனது உரையில் 25,000 ரூபாய் வரையிலான வரிக் கோரிக்கைகளை (Tax Demands) திரும்பப் பெறுவதாக அறிவித்தார். 2009-10 நிதியாண்டில் ரூ.25,000 வரையிலான டேக்ஸ் டிஸ்பியூட்களையும், 2010-11 முதல் 2014-15 நிதியாண்டில் ரூ.10,000 வரை நிலுவையில் உள்ள நேரடி வரி கோரிக்கைகளையும் (Direct Tax Demands) திரும்பப் பெறுவது குறித்து அவர் தனது உரையில் தெரிவித்தார்.  


மேலும் படிக்க | ஜாக்பாட் செய்தி!! இனி மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ