நீங்கள் மத்திய அரசின் பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) கீழ் இலவச ரேஷன் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கானது. அதன்படி அரசாங்கத்திடம் போதிய உணவு தானியங்கள் இல்லை என்பதால் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வசதியை அரசு நிறுத்தலாம் என்று அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வருகின்றது. இதற்கிடையில், டிசம்பருக்குப் பிறகும், ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் PMGKAY திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து பிரதமர் மோடி பரிசீலிப்பார் என்ற செய்தியும் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று அமைச்சரவை கூட்டம் கூட்டப்படுகிறது
மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே இந்தத் தகவலைத் தெரிவித்தபோது, ​​அரசிடம் போதிய உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளது என்று வலியுறுத்தினார். மேலும் PM Garib Kalyan Anna Yojana (PMGKAY) முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டால், இந்த முடிவு பிரதமர் தலைமையிலான அமைச்சரவையால் எடுக்கப்படும். எனவே இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ரேஷன் திட்டத்தை முன்னெடுப்பது உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக கோவிட் காரணமாக செப்டம்பரில், ரேஷன் திட்டத்திற்கான காலக்கெடுவை அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு அதாவது டிசம்பர் 31 வரை நீட்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | குடும்ப தலைவிகளுக்கு மகிழ்ச்சியான அப்டேட்!..எல்பிஜி விலை விரைவில் குறையும்


இலவச ரேஷன் விநியோகத்திற்காக 1.80 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது
வேளாண்மைத் துறை இணையமைச்சர் கரந்த்லாஜே கூறுகையில், 'தற்போது மீண்டும் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. எனவே இதனால் அதை முன்னெடுத்துச் செல்வது குறித்து பிரதமர் முடிவெடுப்பார். 


இதற்கிடையில் கடந்த 28 மாதங்களில், PMGKAY இன் கீழ் ஏழைகளுக்கு இலவச ரேஷன் விநியோகத்திற்காக அரசாங்கம் 1.80 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிற நலத் திட்டங்களின் கீழ் உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான உணவு தானியங்கள் அரசிடம் உள்ளது என்று வேளாண்மைத் துறை இணையமைச்சர் கரந்த்லாஜே தெரிவித்துள்ளார்.


மேலும் கூறிய அவர் வறட்சி மற்றும் பருவநிலை மாற்றத்தின் சில பாதிப்புகள் காரணமாக உ.பி., பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் அரிசி மற்றும் கோதுமை உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது என்ற கருத்து சரியானது அல்ல என்று கூறினார். அத்துடன் ஜனவரி 1, 2023க்குள் சுமார் 159 லட்சம் டன் கோதுமையும், 104 லட்சம் டன் அரிசியும் கிடைக்கும் என்று உணவு அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இதனிடையே ஜனவரி 1 ஆம் தேதி, இடையக அளவுகோலின் படி, 138 லட்சம் டன் கோதுமை மற்றும் 76 லட்சம் டன் அரிசி இருப்பு தேவை. மேலும் டிசம்பர் 15ஆம் தேதி வரை சுமார் 180 லட்சம் டன் கோதுமையும், 111 லட்சம் டன் அரிசியும் மத்தியக் குளத்தில் இருப்பு உள்ளதாக அவர் கூறினார்.


மேலும் படிக்க | புத்தாண்டில் நிம்மதி அளிக்கும் செய்தி! LPG விலை குறைய வாய்ப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ