SBI Recruitment 2021: பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிய அரிய வாய்ப்பு, பயன்படுத்திக் கொண்டால் பலன்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வேலைக்கு ஆள் எடுக்கிறது. ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்கள் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in இல் கிடைக்கின்றன
SBI Recruitment 2021: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) 149 சிறப்பு பணியாளர்கள் மற்றும் எழுத்தர் பணிகளுக்கு ஆள் எடுக்கிறது. ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்கள் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in இல் கிடைக்கின்றன
விண்ணப்பதாரர்கள், உரிய கட்டணங்களை செலுத்தி 2021 மே மூன்றாம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
எழுத்தர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு வழக்கமான அடிப்படையில் இருக்கும், சில சிறப்பு கேடர் அதிகாரி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு வழக்கமானதாகவும், சிலருக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப்படுகிறது.
Also Read | 7th Pay Commission: ஜூலை முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மாறும்?
இந்தப் பணிகளில் சேர ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிப்பது தொடர்பாக திட்டமிடலாம்.
தரவு ஆய்வாளர் (Data analyst)- 8 பதவிகள்
மருந்தாளர் (Pharmacist)- 67 பதவிகள்
தலைமை நன்னெறி அதிகாரி (Chief Ethics Officer) -1 பதவி
ஆலோசகர் (மோசடி இடர் மேலாண்மை (Fraud Risk Management)) - 4 இடங்கள்
துணை மேலாளர் -10 பதவிகள்
மேலாளர்- 51 இடங்கள்
நிர்வாகி- 1 பதவி
துணை தலைமை தொழில்நுட்ப அதிகாரி (ஐடி-டிஜிட்டல் வங்கி) - 1 பதவி
மூத்த சிறப்பு நிர்வாகி - 3 பதவிகள்
மூத்த நிர்வாகி - 3 பதவிகள்
Also Read | இருந்த இடத்திலிருந்தே கடவுளை வணங்குக, கும்பமேளாவிற்கு வரவேண்டாம்...
விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது அடையாளச் சான்று, சுருக்கமான சுயவிவரம், கல்வித் தகுதி உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களையும் வழங்க வேண்டும்.
"விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் (சுருக்கமான சுயவிவரம், அடையாளச் சான்று, வயதுச் சான்றிதழ், கல்வித் தகுதி, அனுபவம் போன்றவை) பதிவேற்ற வேண்டும், இதில் ஏதாவது இல்லை என்றால், விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது" என எஸ்பிஐ அறிவித்துள்ளது.
தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள்:
தேர்வு ஆன்லைனில் தான் இருக்கும். எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு நேர்காணல் இருக்கும்.
விண்ணப்ப கட்டணம்:
பொது பிரிவினர் மற்றும் EWS பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ₹ 750 மற்றும் எஸ்சி / எஸ்டி மற்றும் PWD பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR