உங்க PF கணக்கில் வட்டி வரவு வைக்கப்படுகிறதா? எப்படி சரிபார்ப்பது?
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) பயனாளிகளுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. EPFO 2021-22 நிதியாண்டிற்கான வட்டி கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் வரவு வைக்கத் தொடங்கியது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இ.பி.எஃப்.ஓ) பயனாளிகளுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி இ.பி.எஃப்.ஓ 2021-22 நிதியாண்டிற்கான வட்டி கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் வரவு வைக்கத் தொடங்கியது. அதன் பிறகு விரைவில் வட்டிப் பணம் இ.பி.எஃப்.ஓ இன் 7 கோடி சந்தாதாரர்களின் கணக்கில் பிரதிபலிக்கத் தொடங்கும். இந்த தகவலை இ.பி.எஃப்.ஓ சமீபத்தில் ட்வீட் செய்துள்ளது. நீங்களும் பணியமர்த்தப்பட்டு, உங்கள் பிஎஃப் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், இந்த 4 வழிகளில் உங்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பைச் சரிபார்க்கலாம்.
இ.பி.எஃப் பங்களிப்பு மாதாந்திர அடிப்படையில் கணக்கில் வரவு வைக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் வட்டி கணக்கிடப்படுகிறது. ஆண்டிற்கான மொத்த வட்டி நிதியாண்டின் இறுதியில் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில், மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் வரும் இ.பி.எஃப்.ஓ இன் மத்திய அறங்காவலர் குழு, நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை தீர்மானித்து வருகிறது. பின்னர் இந்த விகிதம் நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்படுகிறது. இதனையடுத்து, தொழிலாளர் அமைச்சகம் மற்றும் இ.பி.எஃப்.ஓ ஆகியவை ஊழியர்களின் கணக்குகளில் வட்டியைச் செலுத்த தொடங்குகின்றன.
மேலும் படிக்க | RBI Digital Rupee:இன்று அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சி; ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இப்போது எப்படி பி.எஃப் பேலன்ஸ் ஐ சரிப்பார்ப்பது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
1. எஸ்எம்எஸ் மூலம் எப்படி செக் செய்வது: உங்கள் UAN EPFO இல் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்கள் சமீபத்திய பங்களிப்பு மற்றும் PF இருப்புத் தகவலை ஒரு செய்தி மூலம் பெறலாம். இதற்கு நீங்கள் EPFOHO UAN ENG ஐ 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். இந்த சேவை ஆங்கிலம், பஞ்சாபி, மராத்தி, இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது. UAN இன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து இந்த SMS அனுப்பப்பட வேண்டும்.
2. மிஸ்டு கால் மூலம் எப்படி செக் செய்வது: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011 22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து பேலன்ஸ் ஐ சரிப்பார்க்கலாம்.
3. உங்கள் PF பேலன்ஸை எவ்வாறு சரிபார்க்கலாம்?
* பயனாளிகள் இ.பி.எஃப்.ஓ இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான - epfindia.gov.inஇணையதளத்திற்கு செல்லவும்
* எங்கள் சேவைகள் என்ற ஆஃப்ஷனை கிளிக் செய்யவும், பின்னர் பணியாளர்களுக்கான விருப்பத்தைத் தேடித் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* அடுத்து ஒரு புதிய பக்கம் திறக்கும். அங்கு சந்தாதாரர்கள் 'உறுப்பினர் பாஸ்புக்' என்பதைக் கிளிக் செய்து, கணக்கு எண் மற்றும் கடவுச்சொல் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.
* பாஸ்புக் திறந்தவுடன், அது முதலாளியின் பங்களிப்பு, தனிநபரின் பங்களிப்பு மற்றும் சம்பாதித்த வட்டி ஆகியவற்றைப் காண்பிக்கும்
* ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் சம்பளச் சீட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள வெவ்வேறு அடையாள அட்டைகளுடன் சரிபார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | EPFO உறுப்பினர்களுக்கு ஜாக்பார்ட்! முழு PF வட்டி தொகையும் கிடைக்க வாய்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ