கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து விட்டது என்ற நம்பிக்கை வலுவடையும் விதமாக, சென்ற மாத ஜிஎஸ்டி வசூல் ₹1.15 கோடியை தாண்டியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த டிசம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரி வசூல் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்து ₹ 1.15 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஜிஎஸ்டி (GST) வரி வசூல் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து வசூலாகிய அளவை பார்க்கும் போது, கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ₹1.13 லட்சம் கோடி  வசூலானது தான் அதிகபட்ச தொகை ஆகும்.


இந்நிலையில் 2020 டிசம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள ஜிஎஸ்டி வசூல் ₹1.15 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது என நிதி அமைச்சக (Finance Ministry) அறிக்கை தெரிவிக்கிறது.


2020, டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ₹1 லட்சத்து 15 ஆயிரத்து 174 கோடி என நிதியமைச்சகம் கூறியுள்ளது.  2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமல் செய்யப்பட்ட பிறகு கிடைத்த அதிகபட்ச வசூல் இதுவாகும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் (Corona Virus) பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மிக வேகமாக மீண்டு, முன்னேற்ற பாதைக்கு வந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது.


கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வரியுடன் ஒப்பிடுகையில், கடந்த டிசம்பர் மாதம்  ₹1.03 லட்சம் கோடியாக இருந்த வரி வசூல், 2020 டிசம்பரில் ₹1.15 லட்சம் கோடியாக, சுமார் 12 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை அறியலாம்.


ALSO READ | Breaking: இந்தியாவில் SII தடுப்பூசி Covishield அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR