மறைமுக வரிகளை நிர்வகிக்கும் அமைப்பான மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (CBIC), வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிப்ரவரி மாதத்திற்கு வரி தாக்கல் செய்யாத பல்வேறு வகை வரி செலுத்துவோருக்கான எச்சரிக்கையாகும் இது. எச்சரிக்கையின் படி, GST வரி செலுத்துவோர் மார்ச் 10 க்கு முன்னர் தங்கள் வரிகளை செலுத்த வேண்டும். அப்படி செய்யத் தவறினால், அவர்கள் தாமத கட்டணம் / அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திங்களன்று பல ட்வீட்கள் மூலமாக, தாமத கட்டணம் அல்லது அபராதத்தை கட்டுவதை தவிர்க்க, வரித் தொகையை காலக்கெடுவிற்கு முன்பே கட்டுமாறு CBIC வரி செலுத்துவோரிடம் கேட்டுக் கொண்டது.


ஈ-காமர்ஸ் (E-Commerce) ஆபரேட்டர்கள் தங்கள் வரியை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்ட CBIC, "GST-யின் கீழ் மூலத்தில் வரி வசூலிக்க வேண்டிய ஈ-காமர்ஸ் ஆபரேட்டர்கள் கவனம் செலுத்துங்கள்! 2021 பிப்ரவரி மாதத்திற்கான உங்கள் GSTR-8 ரிட்டர்னை 2021 மார்ச் 10, 2021 க்குள் தாக்கல் செய்யுங்கள். GSTR-8 ரிட்டர்னை தாமதமாக தாக்கல் செய்தால் அதற்கு வட்டி கட்ட வேண்டியிருக்கும்” என்று கூறியுள்ளது.



ALSO READ: Aadhaar New Update: Aadhaar இன் இந்த அம்சத்துடன் முகவரியைப் புதுப்பிக்கவும்!


"GST-யின் கீழ் மூலத்தில் வரி வசூலிக்க வேண்டிய ஈ-காமர்ஸ் ஆபரேட்டர்கள் கவனம் செலுத்துங்கள்! 2021 பிப்ரவரி மாதத்திற்கான உங்கள் GSTR-8 ரிட்டர்னை 2021 மார்ச் 10, 2021 க்குள் தாக்கல் செய்யுங்கள். GSTR-8 ரிட்டர்னை தாமதமாக தாக்கல் செய்தால் அதற்கு வட்டி கட்ட வேண்டியிருக்கும், தாமத கட்டணமும் கட்ட வேண்டி இருக்கும்” என்று மறைமுக வரிகளை நிர்வகிப்பதற்கான நிதி அமைச்சக அமைப்பும் திங்களன்று ட்வீட் செய்தது.



பதிவுசெய்யப்பட்ட பொருட்களின் உற்பத்தியாளர்கள் 2021 பிப்ரவரி மாதத்திற்ககான தங்கள் மத்திய கலால் வருவாயை மார்ச் 10, 2021 க்கு முன் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



இந்த ட்வீட்கள் நிதி அமைச்சகத்தாலும் (Finance Ministry) ரீட்வீட் செய்யப்பட்டன. இந்த பணிகளை செய்து முடிக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தவிர்க்க, தங்கள் வருமான வரியை உடனடியாக தாக்கல் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


ALSO READ: BSNL அறிவித்த அதிரடி ப்ரீபெய்ட் திட்டம்.. 500GB 395 நாட்கள் செல்லுபடியாகும்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR