சர்வதேச அளவில் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனம் டொயோட்டா. நிறுவனத்தின் வாகனங்கள் பல்வேறு விஷயங்களுக்காக பிரபலமானவை. தற்போது ஒரே பயணத்தில் நீண்ட தூரம் பயணித்த சாதனையை செய்துள்ளது டொயோட்டாவின் மிராய் கார். தற்போது அதன் கிரீடத்தில் மற்றுமொரு மயிலிறகு சூடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Toyota Mirai sets Guinness World Record: உலகச் சாதனையை செய்யும் இரண்டு நாள் நிகழ்ச்சியானது ஆகஸ்ட் 23 அன்று கலிபோர்னியாவின் கார்டனாவில் உள்ள TTC (Toyota Technical Center) இல் தொடங்கப்பட்டது. ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டாவின் மிராய் கார் இந்த மாபெரும் சாதனையை படைத்துள்ளது. 


டொயோட்டாவின் மிராய் கார் ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தி, மிக நீண்ட தூரம் பயணித்த வாகனம் என்ற பிரிவில் கின்னஸ் உலக சாதனை செய்துள்ளது. ஹைட்ரஜனால் இயங்கும் டொயோட்டாவின் மிராய் தெற்கு கலிபோர்னியாவில் மேற்கொண்ட இந்த சாதனை அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்தப் பயணத்தின் ஒரே ஒரு முறை, ஐந்து நிமிடம் மட்டுமே எரிபொருள் நிரப்பப்பட்டு, மொத்தம் 1360 கிலோமீட்டர்களைக் கடந்து மிராய் சாதனை படைத்தது.



ஹைப்பர்மில்லர், வெய்ன் ஜெர்டெஸ் மற்றும் இணை பைலட் பாப் விங்கர் தலைமையில் கார் இவ்வளவு தூரத்தை கடந்துள்ளது. இந்த முழு பயணத்தையும் கின்னஸ் உலக சாதனைகள் குழுவும் கண்காணித்தது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் இந்த கார், ஒரே ஐந்து நிமிட சார்ஜில் 1360 கிமீ தூரத்தை கடந்து அனைவரையும் திகைக்க வைத்தது. இந்த தூரத்தைக் கடக்க இரண்டு முழு நாட்கள் ஆனது என்ற தகவலை டொயோட்டா நிறுவனம், சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டது.


Read Also | Hero Motorcycle மீது பண்டிகை கால சலுகை; ரூ.12,500 மதிப்பில் பல சலுகைகள்..!!


முதல் நாளில், 761 கிமீ பயணம் செய்த டொயோட்டா மிராய், இரண்டாவது நாளில் 600 கிமீ பயணம் மேற்கொண்டது. மிராய், மொத்தம் 5.65 கிலோ ஹைட்ரஜன் எரிபொருளில் 1360 கிலோ மீட்டர் தூரம் பயணித்தது.  அதன் ஒரே உமிழ்வாக (water as its only emission) 152 MPG தண்ணீரை மட்டுமே பதிவு செய்தது. 


இந்தத் தகவலை நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கைப்பிடியில் பகிர்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டது. டொயோட்டா இந்த சாதனையை செய்து சில வாரங்கள் ஆகிவிட்டாலும், தற்போது இந்த சாதனை சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது.


எதிர்காலத்தில் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தி வாகனங்கள் விற்பனையாகும் என்பதற்கான முன்னோட்டமாக இந்த கின்னஸ் சாதனை பார்க்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு முதல், டொயோட்டா மிராய் கார், வட அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்ட முதல் மின்சார தயாரிப்பு ஹைட்ரஜன் கார் மிராய் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Also Read | சூரிய ஒளியால் சார்ஜ் ஆகும் மின்சார கார்கள்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR