ஊதிய உச்சவரம்பை விட அதிக ஊதியத்தில் ஓய்வூதிய பங்களிப்பைத் தேர்வு செய்யாத மற்றும் செப்டம்பர் 1, 2014 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடர்ந்து சேவையில் இருந்த ஊழியர்களுக்கு EPFO புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி


ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் சந்தாதாரர்கள், முந்தைய சாளரத்தின் கீழ் அதிக ஓய்வூதியத்தைத் தேர்வு செய்யாத ஊதியதாரர்களுக்கு இப்போது மற்றொரு விருப்பத் தெரிவை இ.பி.எஃப்.ஓ வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி வெளியான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) திங்கள்கிழமை அதன் அனைத்து மண்டல மற்றும் மண்டல அலுவலகங்களுக்கும் உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் விதத்தில் அறிவுறுத்தல்களை வழங்கியது.


ரூ. 15,000 என்ற வரம்புக்குட்பட்ட ஓய்வூதிய ஊதியம்


சுருக்கமாக சொன்னால், EPFO இப்போது சந்தாதாரர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ. 15,000 என்ற வரம்புக்குட்பட்ட ஓய்வூதிய ஊதியத்திற்கு அப்பால் செல்ல அனுமதித்துள்ளது, அதில் முதலாளிகள் 'உண்மையான அடிப்படை சம்பளத்தில்' 8.33 சதவீதத்தை ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் ஓய்வூதியத்திற்காகக் கழிக்கிறார்கள். 


மேலும் படிக்க | ITR Filing: ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?


டெபாசிட் செய்யும் முறை, ஓய்வூதியத்தை கணக்கிடுதல் பற்றிய விவரங்கள் அடுத்தடுத்த சுற்றறிக்கைகளில் விவரிக்கப்படும் என்று EPFO தெரிவித்துள்ளது.


இதன் அடிப்படை அர்த்தம் என்றால், பணியாளரும், முதலாளியும் ஒன்றாகப் பதிவு செய்து, அதிக மாதாந்திர அடிப்படைச் சம்பளத்தில் 8.33 சதவீதத்தைக் கழிக்க EPFO-ஐக் கோரலாம், இதனால் அவர்களின் பணி வாழ்க்கையில் ஓய்வூதியம் அதிக அளவில் சேருவது உறுதி செய்யப்படும்.  
  
இந்த புதிய சுற்றறிக்கையின் மூலம், செப்டம்பர் 1, 2014 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடர்ந்து சேவையில் இருக்கும் ஊழியர்களின் நிலுவையிலுள்ள வகையை EPFO உள்ளடக்கியுள்ளது.


சமூக பாதுகாப்புக்கு ஊக்கம்
ஒரு பணியாளரும் ஒரு முதலாளியும் சேர்ந்து வரும் நாட்களில் பதிவு செய்து, EPFO க்கு அதிக மாத உண்மையான சம்பளத்தில் 8.33 சதவீதத்தை (ரூ. 15,000 என்ற உச்சவரம்புக்கு எதிராக) ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் கழித்துக்கொள்ளலாம். 


மேலும் படிக்க | பங்கு சந்தை முதலீட்டில் ஆயிரத்தை கோடிகளாக்க வேண்டுமா... சில முதலீட்டு டிப்ஸ்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ


தொழில் நிறுவனங்கள் அளிக்கும் 12 சதவிகிதத்தில் 8.33% தொழிலாளரின் குடும்ப ஓய்வூதியத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும். ஊழியர்களின் பங்கான 12%, தொழில் நிறுவனத்தின் பங்கான 3.5% (ஓய்வூதியத்துக்குக் கழித்தது போக) ஊழியர்களின் சேமநல நிதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தத் தொகைக்கு தற்போது 8.65% வட்டி தரப்படுகிறது.