எச்டிஎஃப்சி வங்கி இணைப்பு: நீண்ட செயல்முறைக்குப் பிறகு, எச்டிஎஃப்சி லிமிடெட் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் இணைப்புக்கான வழி பிறந்துள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி அளித்த தகவலில், அதன் தாய் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லிமிடெட் உடன் இணைக்கும் திட்டத்திற்கு ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஏற்கனவே அங்கீகரித்துள்ளன


ஜூலை 4, 2022 தேதியிட்ட ரிசர்வ் வங்கியின் கடிதத்தை எச்டிஎஃப்சி பெற்றுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. இதில், ரிசர்வ் வங்கி திட்டத்திற்கு 'ஆட்சேபனை இல்லை' (என்ஓசி) என்ற சான்றிதழை வழங்கியது. இதற்காக சில நிபந்தனைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. 


இணைப்பிற்கு சில சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்கள் தேவைப்படும். வாரத்தின் தொடக்கத்தில், முன்மொழியப்பட்ட இணைப்புக்கு பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகியவற்றில் இருந்து ஒப்புதல் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | HCL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்


18 லட்சம் கோடிகள் ஒருங்கிணைந்த அடிப்படை சொத்து


சுமார் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த கையகப்படுத்துதலுடன், நிதிச் சேவைத் துறையில் ஒரு பெரிய நிறுவனம் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எச்டிஎஃப்சி மற்றும் எச்டிஎஃப்சி வங்கியின் இணைப்புடன், நிறுவனம் புதிய இருப்பு பிரிவில் வரும். உத்தேச யூனிட்டின் ஒருங்கிணைந்த சொத்துத் தளம் சுமார் ரூ.18 லட்சம் கோடியாக இருக்கும்.


வாடிக்கையாளர்களுக்கு இது சாதகமாக இருக்குமா? 


எச்டிஎஃப்சி மற்றும் எச்டிஎஃப்சி வங்கியின் இணைப்பு வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் இருவருக்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்து. எச்டிஎஃப்சி-யின் அனைத்து பங்குதாரர்களும் எச்டிஎஃப்சி-யின் 25 பங்குகளுக்கு பதிலாக எச்டிஎஃப்சி வங்கியின் 42 பங்குகளைப் பெறுவார்கள். எச்டிஎஃப்சியின் தற்போதைய பங்குதாரர்கள் எச்டிஎஃப்சி வங்கியில் 41 சதவீத பங்குகளை வைத்திருப்பார்கள். இதற்குப் பிறகு, எச்டிஎஃப்சி வங்கியின் முழு உரிமையும் பொது பங்குதாரர்களின் கைகளில் இருக்கும்.


இந்தியாவின் மிகப்பெரிய இணைப்பு


எச்டிஎஃப்சி மற்றும் எச்டிஎஃப்சி வங்கியின் இந்த இணைப்பு இந்தியாவில் இதுவரை நடந்த மிகப்பெரிய இணைப்பு என்று கூறப்படுகிறது. எச்டிஎஃப்சி மற்றும் எச்டிஎஃப்சி வங்கியின் இணைப்பு சுமார் 40 ஆயிரம் டாலர்கள் மதிப்பிலானது. இந்த இணைப்பு 2024 நிதியாண்டின் இரண்டாவது அல்லது மூன்றாம் காலாண்டில் நிறைவடையும் என்று நம்பப்படுகிறது. இரு நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.18 லட்சம் கோடியாகும்.


மேலும் படிக்க | LIC Premium:ஆன்லைனிலேயே சுலபமாக பிரீமியம் கட்டலாம், செயல்முறை இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR