மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்... இனி உங்களுக்கு ஜனவரி 10 வரை சான்ஸ் இருக்கு..!!
மூத்த குடிமக்களுக்கான வங்கி சிறப்பு நிலையான வைப்புத் தொகை திட்டமான HDFC வங்கியின் சீனியர் சிடிச்ஸம் கேர் FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
HDFC வங்கி: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசை வழங்கியுள்ளது. மூத்த குடிமக்களுக்கான வங்கி சிறப்பு நிலையான வைப்புத் தொகை திட்டமான HDFC வங்கியின் சீனியர் சிடிச்ஸம் கேர் FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் ஜனவரி 10, 2024 வரை HDFC சீனியர் சிட்டிசன் கேர் எஃப்டியில் (HDFC Bank Senior Citizen Care FD) முதலீடு செய்யலாம்.
HDFC வங்கியின் சீனியர் சிட்டிசன் கேர் FD மீதான வட்டி விகிதம்
எச்டிஎஃப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதத்தோடு 0.25 சதவீத கூடுதல் வட்டி அளிக்கிறது. மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen Investment Plans) வங்கி 0.75 சதவீதம் கூடுதல் வட்டி அளிக்கிறது. இது மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD களுக்கு 7.75 சதவீதம் வட்டி அளிக்கிறது. 5 கோடிக்கும் குறைவான FDயில் இந்த வட்டி விகிதம் கிடைக்கும். மூத்த குடிமக்கள் கேர் FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி 10 ஜனவரி 2024 ஆகும். HDFC வங்கி சாதாரண FD யில் மூத்த குடிமக்களுக்கு 3.50% முதல் 7.75% வரை வட்டி வழங்குகிறது.
HDFC வங்கியில் ரூ.2 கோடிக்கும் குறைவான சாதாரண FD மீதான வட்டி விகிதங்கள்
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான முதலீட்டு காலம்: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான முதலீட்டு காலம்: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான முதலீட்டு காலம்: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையிலான முதலீட்டு காலம்: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
61 நாட்கள் முதல் 89 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
90 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான முதலீட்டு காலம்: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரையிலான முதலீட்டு காலம்: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம்
9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்
1 வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவான முதலீட்டு காலம்: பொது மக்களுக்கு - 6.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.10 சதவீதம்
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான முதலீட்டு காலம்: பொது மக்களுக்கு - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
18 மாதங்கள் 1 நாள் முதல் 21 மாதங்கள் வரையிலான முதலீட்டு காலம்: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான முதலீட்டு காலம்: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் வரையிலான முதலீட்டு காலம்: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
2 ஆண்டுகள் 11 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரையிலான முதலீட்டு காலம்: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
2 ஆண்டுகள் 11 மாதங்கள் 1 நாள் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்கள் வரையிலான முதலீட்டு காலம்: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
4 ஆண்டுகள் 7 மாதங்கள் 1 நாள் 5 ஆண்டுகளுக்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ உள்ள முதலீட்டு காலம்: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதலீட்டு காலம்: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.75 சதவீதம்.
மேலும் படிக்க | ஓய்வுக்குப் பிறகு டென்ஷன் இல்லாம இருக்கணுமா... ‘இவற்றில்’ முதலீடு செய்யுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ