கொரோனாவுக்கு மருந்து தயாரித்துவிட்டோம் என ‘பதாஞ்சலி’ ஆயுர்வேதா நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது ‘யோகா குரு பாபா ராம்தேவ்’ மற்றும் அவரது ஊக்கத்தில் உருவான பதாஞ்சலி நிறுவனம் குறித்து இணையத்தில் மக்கள் அதிக அளவில் தேடி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக செவ்வாய் அன்று பதாஞ்சலி(Patanjali) ஆயுர்வேதா நிறுவனம் கொரோனில்(Coronil) மற்றும் ஷ்வாஸர்(Swasar) எனும் இரண்டு மருந்துகளை அறிமுகம் செய்தது. இந்த இரண்டு மருந்தும் தற்போது உலக மக்களை துயரத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த உதவும் என நிறுவனம் கூறுகிறது. எனினும், பதாஞ்சலி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இரு மருந்துகளும் முறையான அனுமதி பெறவில்லை, மருந்து குறித்த முழு தகவல்களையும், ஆய்வு குறித்த முழு தகவல்களையும் நிறுவனம் சமர்பிக்கவில்லை என ‘ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி (AYUSH) அமைச்சகம்’ தெரிவித்துள்ளது. மேலும், கொரோனில்(Coronil) மற்றும் ஷ்வாஸர்(Swasar) மருந்துகளை கொரோனா தொற்றை தீர்க்கும் மருந்துகள் என விளம்பரம் செய்யவும் தடை விதித்துள்ளது.


READ | ராம்தேவின் கொரோனா சிகிச்சை: Coronil பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை...


பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது பிரபலமாகி வரும் பதாஞ்சலி நிறுவனம், ஆரம்பத்தில் வெறும் ரூ.13000 கொண்டு தான் தொடங்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கிறது. இவ்வளவு குறைவான மூலதனத்தில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்பது எவ்வாறு தெரியுமா?


Outlook-ல் வெளியான ஒரு கட்டுரையின் படி, 1995-ல் பதாஞ்சலி(Patanjali) ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பாபா ராம்தேவ் மற்றும் அவரது கூட்டாளியான ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலியை 13,000 ரூபாய்-க்கு பதிவு செய்திருந்தனர். அந்த நேரத்தில் அவர்கள் இருவரிடமும் 3500 ரூபாய் மட்டுமே கையிருப்பு இருந்ததாகவும், நண்பர்களிடமிருந்து கடன் பெற்று பதிவு கட்டணம் செலுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


விவகார அமைச்சின் இணையதளத்தில் கிடைத்த தரவுகளின்படி, 2011-12 நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.453 கோடியாகவும், லாபம் ரூ.56 கோடியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2012-13 நிதியாண்டில் நிறுவனத்தின் வருமானம் ரூ.849 கோடியாகவும், லாபம் ரூ.91 கோடியாகவும் அதிகரித்துள்ளது. சதவீதக் கண்ணோட்டத்தைப் பார்த்தால், நிறுவனத்தின் வணிகம் 6 ஆண்டுகளில் 2231% வளர்ச்சி கண்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த வணிகம் இப்போது ரூ.453 கோடியிலிருந்து ரூ.10561 கோடியாக அதிகரித்துள்ளது.


கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இதுதான் நடைமுறை உண்மை...


READ | கொரோனா-வை குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது பதாஞ்சலி!...