EPFO Update: ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 20 நபர்கள் பணி செய்தால், அதாவது பே-ரோலில் 20 நபர்கள் இருந்தால், அந்த நிறுவனம் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) வசதியை கண்டிப்பாக அளிக்க வேண்டும். EPF என்பது ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இது வரிச் சலுகைகள், ஓய்வூதியங்கள் மற்றும் காப்பீடு ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் இது ஓய்வூதிய கார்பஸை உருவாக்கவும் உதவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணி ஓய்வுக்குப் பிறகு, இதன் உறுப்பினர்கள் மொத்தமாக பணத்தை எடுக்கலாம். இருப்பினும், இபிஎஃப் குழந்தைகளின் கல்வி, தனது திருமணம், மகன், மகள், சகோதரன் மற்றும் சகோதரியின் திருமணம், மருத்துவ அவசர தேவைகள், வீடு கட்டுதல், புதுப்பித்தல் போன்றவற்றிற்கு உறுப்பினருக்கு பணம் தேவைப்பட்டாலும், பணி ஓய்வுக்கு முன்னரே பணம் எடுக்க (premature withdrawals) அனுமதிக்கிறது. 


இபிஎஃப்ஒ (EPFO) உறுப்பினர்கள் தேவை ஏற்படுகையில் பணம் எடுக்க க்ளெய்ம் செய்யும்போது, அதாவது பணத்தை கோரும்போது, சில சமயம் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதும் உண்டு. அப்படி க்ளெய்ம்கள் நிராகரிப்புக்கான சில பொதுவான காரணங்களை பற்றி இங்கே காணலாம். 


முழுமையற்ற அல்லது பொருந்தாத தகவல்கள் (Incomplete Information): 


உறுப்பினர் க்ளெய்ம் படிவத்தில் முழுமையற்ற தகவலை அளித்தாலோ அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துடனான (EPFO) பதிவுகளுடன் அவர் அளித்த தகவல்கள் பொருந்தவில்லை என்றாலோ EPF கோரிக்கை நிராகரிக்கப்படலாம். பெயர் அல்லது வயது பொருத்தமின்மை மற்றும் கணவர் அல்லது தந்தையின் விவரங்கள் இல்லாதது ஆகியவை கோரிக்கை நிராகரிப்புக்கான முதன்மைக் காரணங்களாகும். EPFO இல் உள்ள பதிவுகளுடன் பிறந்த தேதி பொருந்தவில்லை என்றால் கோரிக்கை நிராகரிக்கப்படும். எனவே, கோரிக்கை நிராகரிப்பைத் தவிர்க்க, பெயர், பிறந்த தேதி மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை துல்லியமாக வழங்குவது முக்கியம்.


KYC மற்றும் வங்கி விவரங்கள் முழுமையாக அளிகப்படாமல் இருத்தல் (Incomplete KYC and Bank Details): 


KYC முழுமையடையாமல் அல்லது சரிபார்க்கப்படாமல் இருந்தால் கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம். வங்கி விவரங்கள் முழுமையடையாமல் அல்லது துல்லியமாக இல்லமல் இருந்தாலும் க்ளெய்ம்  தள்ளுபடி செய்யப்படும். எடுத்துக்காட்டாக, கூட்டுக் கணக்கில் கணக்கு வைத்திருப்பவர்களின் வங்கி அல்லது பிற விவரங்கள் பொருந்தவில்லை என்றால், EPFO கோரிக்கையை நிராகரிக்கலாம். மேலும், வங்கி ஐஎஃப்எஸ்சி குறியீடு பொருந்தவில்லை என்றால் கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.


மேலும் படிக்க | ரிசர்வ் வங்கியின் புதிய ATM விதி: பணம் எடுக்கும்போது இதில் கவனம் தேவை


பணியில் சேர்ந்த தேதி மற்றும் வெளியேறிய தேதி: 


பணியில் சேர்ந்த அல்லது வெளியேறும் தேதி விடுபட்டிருந்தால் அல்லது படிவத்தில் சரியாக இல்லாவிட்டால், கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.


ஆதாருடன் UAN இணைக்கப்படவில்லையென்றால்: 


தனிப்பட்ட கணக்கு எண் (UAN) ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், EPFO கோரிக்கையை நிராகரிக்கலாம்.


தவறான க்ளெய்ம் படிவம்: 


நீங்கள் தவறான படிவத்தை நிரப்பி இருந்தால், கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.


மேலும், சில சமயங்களில், முதலாளி கொடுத்த விவரங்கள் முழுமையாக இல்லாமல் இருக்கும். இதன் விளைவாக, கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. EPF க்ளெய்ம் செயல்முறை EPF விதிமுறைகள் மற்றும் தகுதி அளவுகோல்களைப் பின்பற்ற வேண்டும். இணக்கம் தோல்வியுற்றால், கோரிக்கை நிராகரிக்கப்படும்.


க்ளெய்ம் நிராகரிப்பைத் தவிர்ப்பது எப்படி?


EPFO ஆல் க்ளெய்ம் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க, KYC முழுமையாக இருப்பதையும் துல்லியமாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும். அதற்கு, ஆவணங்களின் அசல் நகலைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். நகல்களை பதிவேற்றக்க்கூடாது.  நிராகரிப்பைத் தவிர்க்க KYC முறைகளை முன்பே முடித்து வைக்கவும். 


ஆதார் மற்றும் EPFO போர்ட்டல்களில் பெயர் பொருந்தாமல் இருந்தால், க்ளெய்ம் செய்பவர் அதை பூர்த்தி செய்த பிறகு EPFO க்கு ஒரு கூட்டு அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் விவரங்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், ஏதேனும் ஆதார் சேவை மையத்தில் இருந்து அதை சரி செய்து கொள்ள வேண்டும். நீங்கள் EPF நிதியை திரும்பப் பெறும்போது, காசோலை அல்லது பாஸ்புக்கின் நகலைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். காசோலையில் உங்கள் பெயர் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் அல்லது பாஸ்புக் என்றால் முதல் பக்கம் பதிவேற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்யும்போது, EPF போர்ட்டலில் வங்கி விவரங்கள் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதிசெய்யவும். சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியதும் அவசியம். மேலும் அவற்றைச் சமர்ப்பிக்கும் முன் அனைத்து ஆவணங்களையும் துல்லியமாக சரிபார்க்க மறக்காதீர்கள்.


ஏதேனும் தவறு அல்லது முரண்பாடு இருந்தால், இபிஎஃப் உறுப்பினர் (EPF Member) EPFO உறுப்பினர் போர்ட்டலில் லாக் இன் செய்து, வங்கி மற்றும் KYC விவரங்களைப் புதுப்பித்து, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து, க்ளெய்ம் படிவத்தை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், க்ளெய்ம் செய்த பிறகு, ஒருவர் EPF அலுவலகத்துடன் தொடர்பில் இருக்கலாம். இதன் மூலம், ஏதேனும் சிக்கல் இருந்தால், க்ளெய்ம் மீண்டும் நிராகரிக்கப்படுவதை தவிர்த்து சிக்கலை முன்கூட்டியே சரிசெய்யலாம்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 புத்தாண்டு பரிசுகள்: அகவிலைப்படியுடன் இதுவும் அதிகரிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ